பகுதி - 12

443 76 19
                                    

அனு வீட்டுக்கு போய் சேர்ந்ததுமே முதலில் தேடிப் பார்த்தது மீராவைத் தான்.

அவளது அறையில் போய் பார்க்க அவள் இல்லை என்றதுமே வீடு முழுக்க தேடிப் பார்த்து களைத்துப் போனவள் "எங்கே போய் இருப்பாள்" என யோசிக்க

மொட்டை மாடியில் அவள் இருப்பாளோ என தோன்றவே விறு விறு என அங்கு போனாள்.

அங்கே போய்ப் பார்க்க அவள் அமைதியாக ஒரு ஓரமாக நின்று எதையோ நோக்கிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு சற்றே நிம்மதிப் பெறுமூச்சு விட்டவள்

அவளருகே போய் நின்று "மீரா இங்க என்ன பண்ர?" என்றாள்.

இவள் குரல் கேட்டு திடுக்கிட்டு விளித்தவள் "ஓஹ் வந்துட்டியா..நான் சும்மா தான் டி" என்றாள்.

"மீரா நீ நார்மலா இருந்தா எப்படி இருப்பனு எனக்கு தெரியாதா? சொல்லு என்னாச்சு" என அனு கேட்கவும்

அவளை நோக்காமலேயே "ஒன்னும் இல்லடி" என்றாள்.

"மீரா ப்ளீஸ்..என்கிட்ட சொல்ரதுல என்ன இருக்கு" என இவள் மீண்டும் வற்புறுத்திக் கேட்க

இப்பொழுது தான் அவள் முகத்தை நோக்கியவள் விளிகளில் கண்ணீர் கசிந்து இருப்பதைப் பார்த்த அனு

பதறிப்போய் "மீரும்மா என்னாச்சுடா.." என அவள் தோளில் கை போட்டு அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

"என்னால இங்க இருக்க முடியலடி..அம்மாவ பார்க்கனும் போல இருக்கு" என மேலும் தொடர்ந்தாள் மீரா.

இவர்கள் இருவரும் பிறந்த நாள் முதலிலிருந்து அம்மாவைப் பிரிந்து இருக்கும் முதல் தடவை இது தான் என்பதால் அவள் அப்படி சொன்னதுமே அனுவிற்கும் சற்று உள்ளுக்குள் கவலை குடி கொள்ளத் தொடங்கியது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "மீரா என்னடி இது சின்ன குழந்தை மாதிரி..அத விடு சாப்பிடியா?" என கேட்க

"நீ இல்லாம எப்போ நான் சாப்பிட்டு இருக்கேன்" என்றாள் மீரா.

இந்த பதில் ஏற்கெனவே அனு எதிர்பார்த்தது தான் என்கையில் மௌனமாக புன்னகைத்தவள் "சரி வா முதல்ல போயி சாப்டலாம்..இன்றைக்கு புள்ளா தனியா இருந்தல்ள அதான் கண்டதயும் யோசிச்சிட்டு இருந்திருக்க..பேசாம ஸ்கூலுக்கு வந்திருக்கலாம்ல" என பேசிய படியே அவளை அழைத்துச் சென்றாள்.

காதலென்பது...Where stories live. Discover now