பகுதி - 6

626 90 51
                                    

அடுத்த நாள் காலை ஆரவாரமின்றி அழகுறப் புலர்ந்தது..வெகு நாட்களுக்கு பிறகு பாடசாலை ஆரம்பிப்பதாலோ என்னமோ..! ஸ்கூலுக்கு போகனும் என்ற முழு ஆர்வத்தோடு எழுந்த அதி

காலைக்கடன்களை நிறைவு செய்து கொண்டு வந்து அயர்ன் டேபிலின் அருகில் போய் நின்றான்.

ஆம் அவனுக்கு அவன் வேலைகளை அவனே செய்து கொள்வது தான் என்றும் திருப்திகரமாக இருக்கும்..எனவே தான் யூனிபார்மையும் அவனே அயர்ன் செய்து கொள்வான்.

அவன் செய்யும் வேலைகள் தான் செய்து கொடுப்பதை விட நேர்த்தியாக இருப்பதால் தேவியும் எதையும் கண்டுகொள்ளாமல் "சரி உனக்கு என்ன வேணுமோ பண்ணிக்கோ" என விட்டு விடுவார்.

அவனாகவே அயர்ன் செய்து யுனிபார்மை அணிந்து கொண்டு கண்ணாடியின் முன்னே போய் நின்று தன் நிலையைப் பார்க்க

தலைமுடி கலைந்து போய் காக்கையின் கூட்டுக்கு சமமாக இருந்தது.

அருகில் இருந்த சீப்பு கொண்டு தலையை சீவியவன் காதுகளுக்கு "அதி சாப்ட வாடா" என அம்மா தேவி அழைத்தது

கேட்கவும் "இதோ வரேன்மா" என்றவாறே சீப்பை உரிய இடத்தில் வைத்து விட்டு

சாப்பிடப் போனான்.

நேரத்திற்கு காலை சாப்பாட்டையும் உண்டவன்

சிறிதும் பதற்றம் இல்லாமல் நேர்த்தியாக ஸ்கூலுக்கு கிளம்பி போனான்.

அவனது வாழ்க்கை வரலாற்றில் அவன் இவ்வளவு நேர்த்தியாக ஸ்கூலுக்கு போன முதல் தடவை இது தான்.

சரி வாங்க அடுத்த வீட்டுல என்ன நடக்குதுனு பார்ப்போம்

பக்கத்து வீட்டை ஒரு எட்டு போய் பார்த்தால்
மீராவின் குரட்டை சத்தம் இன்னும் காதுகளை துளைத்துக் கொண்டு சென்றவாறு இருந்தது.

அனுவோ விடியற்காலையிலேயே எழுந்து குளித்து தன் அத்தைக்கும் மாமாவிற்கும் காபி போட்டு கொடுத்து விட்டு

காதலென்பது...Where stories live. Discover now