பகுதி - 33

338 52 10
                                    

சன்ஜய் தரையில் வீழ்ந்திருந்ததைப் பார்த்த சத்யாவிற்கு
திடீரென நடந்த இந்த நிகழ்வால் அதிர்ச்சி மேலோங்க "சன்ஜய்" என கத்தியபடியே அவனருகே ஓடினாள்.

முதலில் அவனது தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டவள்

அவனது கன்னத்தை தன் கைகளால் தட்டி அவனை எழுப்ப முற்பட்டாள்.

அந்த நேரம் இலேசாக அவன் ஒற்றைக் கண்ணைத் திறந்ததை பார்த்தவளுக்கு
புரிந்துவிட்டது.

அவள் "சன்ஜய் ஏன் இந்த விடயத்துல விளையாடிட்டு இருக்க" என்றாள் சற்று கோபமான தொனியில்

இதன் போது இரண்டு கண்களையும் சட்டென திறந்தவன்
"நீ கோபமா போனியா?! உன்னை எப்படி நிறுத்துறதுனு தெரியல" என்றான் அப்பாவியாக

"அதுக்குனு இப்படியா" என்றவாறே அவள் தலையில் கொட்ட

"ஆஹ்...வலிக்கிது டி" என்றவாறே அவளைப் பார்த்து சிரித்தவன் தலையைத் தடவிக் கொண்டான்.

இதன் போது கூட "சத்யா சொல்லு நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கட்டும்" என்று அவன் கேட்க

"சன்ஜய்..." என சளித்தவாறே சத்யா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் முகத்தை தன் கை கொண்டு அவன் பக்கம் திருப்பி அவள் விழிகளை நோக்கியவன்
"எனக்கு பதில் கிடைச்சாச்சு...ஆனா உன்னோட வாய்ல இருந்து தான் அது வரல" என்றான்.

அவன் பார்த்த பார்வையில் கன்னங்கள்  இரண்டும் சிவந்து போனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை விறைப்பாக வைத்தபடியே அவனை நோக்கிக் கொண்டு இருந்தாள்.

இந்த நேரம் பார்த்து போட்டோ எடுக்கும் ஒரு சத்தம் கேட்க
திரும்பிப் பார்த்த சத்யா
தன் மடிமேல் இருந்த சன்ஜய்யை நோக்கி
"எழுந்திரு டா...யாரோ போட்டோ எடுக்குறாங்க போல" என்றாள் பதறியபடியே

இதைக் கேட்டவன் மறு கணமே எழுந்து கொண்டு "யாரு டி போட்டோ எடுத்தாங்க?" என்றான் அவளை மிஞ்சிய பதற்றத்தோடு

சத்யா கை நீட்டிய திசை வழியே அவன் பார்க்க
அங்கே ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மங்கை கையில் மொபைலோடு நின்றிருந்தாள்.

காதலென்பது...Where stories live. Discover now