பகுதி - 11

529 71 44
                                    

அடுத்த நாள் காலை இனிதே புலர்ந்தது.
அங்கே ஹாஸ்டலில் தங்கியிருந்த சத்யா தன் தோழி பானு எனப்படும் பானுமதியின் இடைவிடாத டாச்சரால் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

"பானு நானே அப்பப்போ தான்டி கொஞ்சம் லேட்டா எந்திருக்கிறேன்..நீ ஏன்டி அதுக்கு போய் எங்க அம்மாவ விட மோசமா திட்ற" என்றாள் கண்களில் வழிந்த தூக்கத்தை குரலில் வெளிப்படுத்தியபடியே

"சத்யா..உன்னை பார்க்க எனக்கும் பாவமா தான் இருக்கு..அதனால நான் டிஸ்டர்ப் பண்ணல நீ நல்லா தூங்கு.." என சத்யா சற்றும் எதிர்பார்க்காததை உரைத்தபடியே அவளருகே வந்து அமர்ந்து கொண்டவள் தன் கை கொண்டு அவள் முகத்தை தன் பக்கமாக திருப்பி

"என்ன டி இப்படி சொல்லுவேன்னு நினச்சியா..ஒழுங்கா போய்ட்டு ரெடி ஆகிட்டு வா காலேஜ்கு போகனும்ல" என சட்டென வெடித்தாள்.

சத்யாவும் பானுவும் பாடசாலையில் படிக்கும் காலத்தில் இருந்தே ப்ரெண்டஸ்.இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே கோர்ஸ்ஸை செலெக்ட் பண்ணியது மட்டுமில்லாமல் ஒரே காலேஜிலும் சேர்ந்தனர்.
இருவரும் ஒரே ஊர் தான்.

குளித்துக் கொண்டு தலையை துவட்டியபடியே வந்தவள் பானு இருந்த நிலையைக் கண்டு வாயை முதலை போல பிளந்தாள்.

கண்ணாடியின் முன்னாலே நின்று இருந்தவள் ஒரு டெனிம் அணிந்து இருந்தாலும் அது முழங்காலுக்கு சற்று தான் கீழே இருந்தது.
அவள் அணிந்து இருந்த டீ ஷர்ட்டோ கையை சற்றே மேலே தூக்கினால் இடுப்பு தெரிந்து விடும் என்ற நிலையில் இருந்தது.

சிட்டிப் பெண்களுக்கு இது சகஜம் என்றாலும் இவர்களைப் போல கிராமத்துப் பெண்களுக்கு இது வாயைப் பிளந்து பார்க்க வைக்கும் விடயம் தானே.

"பானு.." என அழைத்தபடியே அவளருகே வந்த சத்யா
மேலும் எதனையும் பேச முன்னால்

"எவ்வளவு நாளைக்கு தான் சுடிதாரே போட்டுட்டு திரிய முடியும் இங்க வந்தாச்சும் ஒரு சேன்ஜ் வேணும்ல அதனால தான் இந்த கெட்டப்..
சத்யா கண்ணு எப்படி இருக்குனு மட்டும் சொல்லு" என்றாள் பானு

காதலென்பது...Where stories live. Discover now