நாளைக்கு நியூ இயர். எல்லாரும் பிறக்கவிருக்கும் புது வருடத்தை ஆவலோடு வரவேற்க ஏற்பாடுகள் கவனித்து கொண்டிருக்க வழக்கமாக. இது போன்ற நேரங்களில் குஷியாக இருக்கும் 23 வயது சிறுவாசுகி இன்று சோகமாக இருக்கிறாள். காரணம் இல்லாமல் இல்லை. அவளுடைய ஆசை ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அவளுடைய பெற்றோர்க்கு இதில் உடன்பாடு என்பது இல்லை. அவர்களுக்காக பொறியியல் படித்து இவள் ஒருவருடம் ஐ டி கம்பெனியில் வேலைக்கு சென்றாலும் அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து முயற்சி செய்து இப்போது தான் ஒரு படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக வாய்ப்பு கிடைத்து உள்ளது. நாளை மறுநாள் ஷூட்டிங் என்ற நிலையில்தான் அதே நாளில் சிறுவாசுகியை பெண் பார்க்க வருகின்றனர். இவள் மறுப்பு அவள் பெற்றோரின் காதில் விழவே இல்லை. மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரே பையன் என்பதும் டாக்டர் என்பதும் அதோடு நல்ல குடும்பம் என்பதும் சிறுவாசுகியை அவர்களுக்கு திருமணம் செய்து தர போதுமானதாக இருந்தது. சிறுவாசுகியை அவர்களுக்கு பிடித்து இருப்பதால் எப்படியும் திருமணம் 90% உறுதிதான்.இதை எல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தாள்.அப்போது அவளுடைய அம்மா வந்தார்.
அம்மா :என்ன இங்க உக்காந்து இருக்க வெளிய எல்லாரும் புது வருசத்துக்கு தயார் ஆகிட்டு இருகாங்க நீ மட்டும் இங்க உக்காந்துட்டு இருக்க
வாசுகி :இல்ல எனக்கு விருப்பம் இல்லை
அம்மா :நம்ம தெருவுல இருக்குற எல்லாரும் கேக் வெட்ட ரெடி ஆகிட்டு இருக்காங்க. எல்லாரும் அங்க சந்தோசமா இருக்குறப்போ நீ மட்டும் இங்க சோகமா இருக்க
வாசுகி :எல்லாருக்கும் சந்தோசம் தர்றது எனக்கும் சந்தோசம் தரும்ன்னு நீங்களா முடிவு பண்ணா நான் ஒண்ணும் பண்ண முடியாது
அம்மா :மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா. இங்க பாரு பையன் நல்ல பையன் உன்ன நல்லா பாத்துப்பான். நீ கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு கூட போக வேண்டாம் ராணி மாதிரி வாழலாம். இந்த சினிமா எல்லாம் நமக்கு செட் ஆகாதும்மா.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...