என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
81 Partes Concluida அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்...
மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்...
ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...