தேடல் - 17

235 22 27
                                    

கண்கள் மருள தன் நிலை இழந்து மயங்கும் முன் நிரன் இறுதியாய் சத்யா என கத்த தன் நண்பனை கசந்த புன்னகையுடன் நோக்கிய சத்யா அங்கிருந்து சில நொடிகளிலே மறைந்திருந்தான்...

உடல் வலியுடன் மன வலியும் சேர்ந்து அவனை சோர்வாக்க அந்த அறைக்குள் திடுக்கிட்டு ஓடி வந்த அஜிம்சனா நிரன் கீழே விழுந்ததை கண்டு அவனிடம் ஓட யாரி சத்யாவை காணாமல் வீரிட்டு அழத் தொடங்கினாள்...

நிரனை தூக்கி அமர வைத்தவள் அவன் கன்னத்தை தட்ட அவன் சத்யா சத்யா என்றதை தவிர்த்து வேறெதுவும் கூறவில்லை...

அஜிம்சனா : நிரன்.. நிரன் .. நிரன் கண்ண திற நிரன்.. என்ன பாரு... நிரன் ... ப்லீஸ் என்ன பாரு டா...

நிரன் : சத்.யா... போ..ய்...டா..ன்..

அஜிம்சனா : சத்யா அண்ணா பூமிக்கு தான் போய்ர்ப்பான்... நாம பூமிக்கு போகலாம் வா

நிரன் : இல்..ல டி.. அ..வ.ன்..

அஜிம்சனா : ப்லீஸ் நிரன் என்ன பாரு மொதல்ல... சத்யா அண்ணா பூமிக்கு தான் போய்ர்க்கான்... ஹி ஈஸ் ஃபைன்...நீ கண்ண திற ப்லீஸ்... யாரி ரொம்ப பயந்து போயிருக்கா... அவள நா சமாதானப்படுத்தனும்டா... நீ மயங்கீட்டா நீ எந்திரிக்கிர வர என்னால உயிர கைல புடிச்சிட்டு உக்காந்துருக்க முடியாது ப்லீஸ்... என அழுதவளின் குரலில் என்ன கண்டானோ

அவளின் சொற்களில் அவளின் வலியை உணர்ந்து அவளை கண்களை திறந்து நேருக்கு நேராய் நோக்கினான்...

நிரனின் கரம் அவனின் இதயத்தின் மீது இருந்த அவனவளின் கரத்தை இறுக்கி பிடிக்க அவளின் கண்ணீரை மறு கரத்தால் துடைத்து விட்டான்...

நிரன் : என்..னோ..ட ஷ.ர்ட் எ.டுத்துத்தரியா.. என்கவும் தலையசைத்து எழுந்த அஜிம்சனா அந்த அறையிலிருந்த ஒரு அலமாரியை திறந்து அதிலிருந்து அவனின் ஒரு சட்டையை எடுத்து நிரனுக்கு அணிய உதவினாள்...

தோளில் துணி பட்டு அவனின் காயம் லேசாய் எரிவதை போலிருந்தாலும் அது தாங்கக் கூடிய வலியாய் இருந்ததால் தடுமாறி எழுந்து நின்றவன் உடனே அவனின் கடிகாரத்தை உயிர்பித்தான்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now