தேடல் - 30

201 16 19
                                    

தன் உணவை முடித்து கொண்டு இப்போது ஒரு மிட்டாயை ருசித்து கொண்டிருக்கும் காதலியை கன்னத்தில் கை வைத்தவாறு பார்த்து கொண்டிருந்த வினய் திடீரென தன் செல்பேசி சினுங்கியவும் அதை எடுத்து பார்க்க " டெவில் ஹெட் " என்ற பெயரை கண்டு உடனே நேரத்தை பார்க்க தாங்கள் இங்கு வந்து முக்கால் மணி நேரமானதை கண்டு அவன் கண்கள் அகல விரிந்தது... மீண்டும் ஒரு முறை செல்பேசி சினுங்கவும் இம்முறை அதை அட்டெண் செய்து காதில் வைத்தான்

வினய் : சொல்றா மச்சான்

யதீஷ் : டேய் எங்க டா இருக்கீங்க... லென்ஸ் வாங்குறியா இல்ல கடையையே எழுதி வாங்க போறியா என எடுத்த எடுப்பிலே அவன் மறுப்புறத்திலிருந்து கத்த ஃபோனை சற்று காதை விட்டு தள்ளி வைத்து கொண்டு இன்னமும் மும்மரமாய் மிட்டாயை ருசித்து கொண்டிருந்தவளை அவஸ்த்தையாய் நோக்கினான் வினய்

வினய் : தோ தோ பார்க்கிங்க்கு தான் டா வந்துக்குட்டே இருக்கோம்... தோ உன்ன பாத்துட்டேன்.. நீ என் தலைய வெளிய விட்டுட்டு கத்திக்கிட்டு இருக்க... காக்கான்னு நெனப்பா உனக்கு.. இரு இரு வரேன் வரேன் என யதீஷிற்கு பதிலளிக்கவே நேரம் கொடுக்காமல் மீராவை இழுத்து கொண்டு ஓடினான்...

மீரா : டேய் டேய் என் சாக்லேட்டு டா

வினய் : போற வழில வாங்கித் தரேன் டி வா என படிகளை விட்டு இறங்கியவர்கள் கூட்டத்தை கடக்க எத்தனித்த போது வினய் ஓரிடத்தை கண்டு திடீரென ப்ரேக்கிட்டு நின்றான்...

யதீஷ் மற்றும் ரியா ஒருவரை ஒருவர் காணாமல் அவரவரது செல்பேசியில் மூழ்கியிருந்தனர்... அவன் சமாதானம் அடைந்ததும் தான் மனதிலிருந்து கூறிய வார்த்தையை ரியாவும் முதல் முறை தன்னவளிடம் மடை திறந்த வெள்ளமென உடைந்ததை யதீஷும் எண்ணி மனம் நெகிழ்ந்தனர்...

யதீஷிடம் ரியாவின் அரவணைப்பில் உணர்ந்த உணர்வை பகுத்தறிய கூறினால் அவன் கனவுலகில் சஞ்சரித்திருப்பான்... அந்தளவிற்கு அவளின் வார்த்தைகளும் அவளின் அரவணைப்பும் அவனுக்கு இதுவரை அறிந்திடாத ஒரு உலகத்தை காட்டியிருந்தது...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Unde poveștirile trăiesc. Descoperă acum