தேடல் - 14

276 22 149
                                    

அவனிருந்த அறை மொத்தமும் சின்னாபின்னமான நிலையில் அவனை கண்டு நொந்து கொண்டிருந்தது...

ஒரு மணி நேரம் அந்த அறையிலிருந்த அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்து நொருக்கி துவம்சம் செய்த பின்னும் சைத்தான்யாவின் கோவம் தனிந்ததாய் தெரியவில்லை...

இவனை சமாளிக்கும் வழியறியாமல் அந்த வயதானவர் அவன் உடைக்கும் ஒவ்வொரு பொருளின் மரண ஓலத்திலும் வெளியே வரத் துடிக்கும் இதயத்தை பிடித்து கொண்டு தன் கால்களுக்கு நடைபயிற்சி கொடுத்து கொண்டிருந்தார்...

ஆனால் அவர் எண்ணியதை விடுத்தும் சைத்தான்யா மிகவும் மோசமான நிலையில் இருந்தான்... அந்த அறையின் ஒரு மூலையில் இத்துனை நாட்களும் காட்சி பொருளாய் வைக்கப் பட்டிருந்த மது இரசாயனங்களை கண்ட சைத்தான்யா அவைகளையும் கீழே தூக்கி போட்டு உடைக்க அவன் கெட்ட நேரம் அவன் முன்பே உடைத்து வைத்திருந்த ஒரு மின்விளக்கு கரன்ட் வால்ட்டினாலோ அல்ல உடைந்த கடுப்பினாலோ குபுகுபுவென தீயாய் கொதித்து கொண்டிருந்ததால் அந்த மது இரசாயனமும் கன்னாடிகளும் பட்டுத் தெறித்த நொடியே அங்கு பொறியென தீப் பற்றத் தொடங்கியிருந்தது...

அது ஓரமென்பதால் அளவில்லா வேகத்தில் சைத்தான்யா முன்பே ஆத்திரத்தில் பாதி கிளித்து கீழே தள்ளி விட்டிருந்த தீரை சேலைகளை அடைந்து அதுவும் பற்றிக் கொள்ள தன் பின் ஒரு பகுதியே பற்றி எரிவதை ஐந்து நிமிடம் பின்னே கவனித்த சைத்தான்யா அதை அணைக்கும் வழியை யோசிக்காமல் அந்த செல்ஃபில் மீந்திருந்த ஒரு சிறிய மது பாட்டிலை அந்த சுவற்றிலே ஓங்கி அடிக்க அது பட்ட நொடி தீ இன்னும் பரவவும் வெடித்து நொருங்கிய அந்த கன்னாடி பாட்டிலின் கூரான துகள் சைத்தான்யாவின் கழுத்தை பதம் பார்க்கும் முன் அவனை பின்னிருந்து யாரோ இழுத்து கீழே தள்ள நிதானத்தை இழந்த சைத்தான்யா தன்னிலை இழந்து நூலிடையில் உயிர் தப்பி மயங்கி சரிந்தான்...

அவன் கீழே விழுந்ததும் அவனோடு கீழே விழுந்த அவனும் பெருமூச்சு வாங்க கொஞ்சம் தாமதித்திருந்தாலும் இங்கு என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க இயலாதவனாய் கண்களை மூடி தலையை சிலிப்பினான் மித்ரான்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora