தங்கள் மேல் நடக்கும் காட்சிகளை வலி நிறைந்த கண்களுடன் பார்த்து கொண்டிருந்த அன்பரசி கண்ணீர் மழ்க தலை குனிந்து அவர் கைகளில் முகம் புதைத்து கண்ணீர் விட்டார்...
அவரின் தோழி என்றோ ஒரு நாள் இவ்வாறு ஒரு ஆபத்து வந்து உலகே அழிய நேரிடுமென கூறியது விட்டு விட்டு மீண்டும் மீண்டும் கேட்க அவரை சமாதானம் செய்யும் நிலமையில் அவரது கணவரும் இல்லை...
கண் முன் நிகழும் உண்மையை மறைத்து அவரால் மட்டும் என்ன பொய் கூறி விட முடியும்?? அவரும் தலை குனிந்து ஒரு வலி நிறைந்த பெருமூச்சை இழுத்து விட்டு அடர்த்தியாய் மாறியிருந்த ஊதா நிற விண்ணை காண நிமிர்ந்தவரின் கண்கள் ஆச்சர்யத்தில் அந்த பெரிய பெரிய நச்சத்திரங்களாய் மாறியிருந்த எரிக்கல்களோடு மின்னியது....
கருமையை மெதுமெதுவாய் சூழ்ந்து வந்த ஊதா நிறம் மெதுமெதுவாய் அடர்த்தி பெற்றிருக்க விண்வெளியின் இருளான வானம் அந்த ஊதா நிறத்தை பின்னுக்கு விரட்டிக் கொண்டிருந்தது....
" இதுக்கு வாய்ப்பே இல்ல!!! " என்ற தன் கணவரின் குரலை கேட்டு தானும் அவரை திரும்பி நோக்கிய அன்பரசி அவரின் முகத்தில் தெரிந்த அப்பட்டமான ஆச்சர்யத்தை கண்டு கண்ணீரை கூட துடைக்க எண்ணமின்றி அப்படியே அன்னாந்து பழைய நிறத்திற்கே மாறிக் கொண்டிருந்த வானத்தை நோக்கினார்...
நிலா
நிரன் தானிருந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்த படி சிந்தித்து கொண்டிருக்க லியான் அமைதியாய் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தான்... இவ்விருவரை அந்த கோட்டை முழுவதும் வீரர்கள் அலசி ஆராய்ந்து தேடி கொண்டிருக்கின்றனர்... எப்போது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் இங்கு வரலாம் அதற்கு முன் இவர்கள் இங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றாக வேண்டும்... அதற்கு முன்பாக ஷரூராவிற்கு உண்மையிலே என்ன தான் நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நிரன் அந்த சிறையிலிருந்த இரகசிய கமேராக்களை நாசூக்காய் ஹக் செய்திருந்தான்...
أنت تقرأ
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
خيال علميஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...