குளியலறை விட்டு தலையை துவட்டிக் கொண்டு வெளியேறிய அஜிம்சனா நிரன் அறையை விட்டு வெளியேறி ஒன்றரை மணி நேரம் கடந்திருப்பதை தன் டிஜிட்டல் கடிகாரத்தில் கண்டு தன் நீண்ட கூந்தலை ஒரு க்ளட்சால் அடக்கி விரித்து விட்டாள்...
அவளின் வேகத்திற்கு இனங்காமல் அது பாட்டிற்கு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க அஜியோ அந்த அறை முழுவதிலும் சுற்றி சுற்றி இருந்த காகிதங்களையும் சில அறிவியல் குறிப்பிகளையும் புத்தகங்களையும் கோப்புகளையும் சேகரித்து நேர்த்தியாய் அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்...
அவர்கள் பூமிக்கு அல்லாது வேறு இடத்திற்கு செல்வதாய் காட்ட வேண்டி அவளது ஹ்யூமனாய்டு ரோபோட்டையும் உயிர்பிக்க அதுவோ எழுந்ததும் ஹாய் அஜி என்றது...
இரண்டரை வருடம் (பூமி கணக்கின் படி ) முன்பு குரோபடரான் ராஜாவிடம் மாட்டிக்கொள்ள விருந்ததால் இங்கு வந்ததும் நிரன் அஜிம்சனா இருவரும் அவரவர் ரோபோட்டிற்கு அவர்களின் உணர்வுளையும் மொத்தமாய் பகுத்திருந்தனர்...
அஜிம்சனா : நாங்க வெளிய போறோம்.. அதனால நீயும் நிரனோட ரோபோட்டும் தான் இங்க உள்ள நிலமையும் பாத்துக்கனும் சரியா...
ரோபோட் அஜிம்சனா : ப்ரின்ஸ் நிரனும் உங்க கூட வராங்களா ... அப்டீனா இப்போ அவரு எங்க... எனக்கு ப்ரின்ஸோட ரோபோட் அக்டிவேட்டானதா கனெக்ஷன் கிடைக்கலையே...
அஜிம்சனா : ஆமா... என ஒரு யோசனையில் முதல் கேள்விக்கு மட்டும் பதிலளிக்க
ரோபோட் அஜிம்சனா : நீங்க எங்க போறீங்க
அஜிம்சனா : ஹ்ம்ம் நாங்க என ஏதோ கூற வரவும் சட்டென அவளது அறை கதவு தடாளென திறக்கப் பட அஜிம்சனா அவளது ரோபோட்டின் ஒரு பட்டனை அழுத்தியதும் அது கண்ணிற்கு அகப்படாமல் அங்கேயே சுருங்கி அமர்ந்து கொண்டது...
வேகமாய் அந்த இடத்தை விட்டு வெளியேறிய அஜிம்சனா கதவருகில் நின்றவரை கண்டு பின் வாங்கி நிற்க அவளை தேடி கண்களை சுழல விட்டு அறையின் ஒரு ஓரத்தில் கண்டதும் மூக்கில் புகை வராத கணக்காய் அவளை ஒரு பார்வை பார்த்தார் நிலவின் அரசர் குரோபடரான்
CZYTASZ
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...