நிலா
தன் முன் எங்கிருந்தோ வந்து குதித்தவனை கண்டு திடுக்கிட்டு அந்த பெண்மணி நெஞ்சை பிடித்து கொண்டு பின்னே நகர லியான் முதலில் கேட்ட கேள்வியே அவருக்கு மாரடைப்பை கொடுத்தது...
அப்பெண்மணி : எனக்கு நீங்க யாருன்னே தெரியாது... என்ன விடுங்க.. நா உங்கள வேற யாரோன்னு நெனச்சிட்டேன்... நா எந்த குழந்தையையும் அனுப்பி வைக்கல... என அவர் எடுத்த எடுப்பிலே மறுத்து விட்டு அங்கிருந்து செல்வதிலே குறியாய் இருக்க பொருமை இழந்து தன் தோள் வரை நீண்ட கேசத்தை அழுந்த கோதிய லியான்
லியான் : அம்மா ப்லீஸ்... நீங்க ஏரண்னு யார சொன்னீங்கன்னு எனக்குத் தெரியல... பட் ஐம் ஷ்யுர் எனக்கும் அவருக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு... அவரு யாருன்னு தெளிவா சொல்லுங்க ப்லீஸ்...
உண்மை தான்... லியானுக்கு அவனும் அவனின் சகோதரனின் அவ்விருவரின் தந்தையின் அச்சடித்த பத்திரம் என்ற உண்மையே தெரியாது... சத்யாவாவது அவர்களின் தாய் வரைந்த மார்னின் கண்களை பார்த்திருக்க அதை கூட லியான் பார்த்ததில்லை...
அப்பெண்மணி : இல்ல தம்பி... அப்டிலாம் யாரும் எனக்கு தெரியாது... என்ன விடுங்க நா போகனும்...
லியான் : ஏங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி செவனேன்னு போய்ட்டு இருந்த என்ன புடிச்சு ஏதேதோ சொல்லி கொழப்பீட்டு இப்போ எதுவும் தெரியாதுன்னு சொன்னா எப்டி என அவனும் ஒரு கட்டத்தில் காட்டு கத்து கத்த அவரோ அனை மீண்டும சற்று சந்தேகமாய் நோக்கியவர்
அப்பெண்மணி : நீங்க உண்மையாவே ஏரண் இல்லையா தம்பி? என மீண்டும் கேட்க லியானுக்கு எங்கு சென்று முட்டி கொள்ளலாமென்றிருந்தது..
லியான் : இங்க பாருங்கமா... நீ ஏரண்னு யார சொல்றீங்கன்னு எனக்கு தெரியல.. என் பேரு லியான்-என அவனை முடிக்க கூட விடாமல் அவர் வாயை பிளந்து அதிர்ச்சியை வெளிகாட்ட லியான் சொல்வதை அப்படியே நிறுத்தி விட்டிருந்தான்...
அப்பெண்மணி : கடவுளே.. லியான் நீயா இது... இத்தன வர்ஷம் களிச்சு பாத்ததும் நா உன்ன உங்க அப்பான்னு நெனச்சிட்டேன்ப்பா... என்றவரை இப்போது அவன் நம்பாமல் பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் புரிந்ததை போல தலை கால் புரியாது ஏதேதோ வேகமாய் தன் சட்டை பையில் அவர் தேட... சில நொடிகளிலே ஒரு தட்டையான மரப்பெட்டியை தேடி எடுத்தார்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...