தேடல் - 39

238 16 23
                                    

டிவின் : என்ன டா சொல்ற டேய் என்ன டா சொல்றான் இவன்.. என அவன் கூறியதை ஜீரணிக்க இயலாமல் திறந்த வாய் மூடாது நின்ற நிரனையும் ஜன்னலின் வழியே தலையை நீட்டி ஏதோ செய்து கொண்டிருந்த லியானையும் உலுக்கினான்...

லியான் : ஆமா டா... இந்த கிரகம் பேரு வியோனார்... பூமி மெடர்மான்னு எல்லாத்துக்கும் முன்னமே தோன்றிய மனிதர்கள் வாழ்ந்த முதல் கிரகம்...

நிரன் : வாட் த ஹெல்!!!!!!!!!

லியான் : ஏதோ பிரச்சனையாய்டுச்சு டா... இங்க வானம் எப்பவுமே ப்லூவா தான் இருக்கும்... இது பச்சையா இருக்க வாய்ப்பே இல்ல...

டிவின் : அது பச்சையா இருந்தா என்ன ப்லூவா இருந்த என்ன... இந்த கிரகத்த எப்டி டா கண்டுப்புடிச்ச நீ...

லியான் : அது வந்து... நா கண்டுப்புடிக்கல டா...

நிரன் : பின்ன அதுவே வந்து உன்ன இழுத்துக்குச்சா...

லியான் : இல்லடா... வட்ரன் தான் வியோனார முழுசா கண்டுப்புடிச்சது...

டிவின் : இரு இரு... இந்த வியோனார் ங்குர பேரு ஃபெமிலியரா இருக்கே... நமக்கு முன்னாடியே தெரியுமா அத...

தமிழகம்

தில்வியா : உனக்கெப்டி டி இந்த பேரு தெரியும் என வாலும் புரியாமல் தலையும் புரியாமல் வியோனார் என்ற பெயரை உச்சரித்த அஜிம்சனாவை நோக்கி கேள்வி எழுப்ப குழப்பத்தில் விழி பிதுங்கி நின்றோர் மத்தியில் தில்வியா மாத்திரம் தெளிவாய் நின்றிருந்தாள்...

அஜிம்சனா : எனக்குத் தெரியுமா... அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா...

தில்வியா : ஹ்ம் தெரியுமே... லெனா அம்மா ( மெடர்மான் நாயகர்களின் வளர்ப்பு அன்னை)  எங்களுக்கு சின்ன வயசுல ஒரு கதை சொல்லுவாங்க... அந்த கதைல நாங்க நல்லா படிச்சு பெரிய விஞ்ஞானிகளாகி வேற வேற கிரகத்தல்லாம் கண்டுப்புடிப்போம்னு சொல்லுவாங்க... கிரகத்துக்கு பேரு வக்கினுமேன்னு அப்போதிக்கு ஏதோ ஃத்வருண் தான் வியோனான்னு என்னமோ சொன்னான்... லெனாமா அத வியோனார்னு திருத்தி எங்கள விளையாட விட்டாங்க

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now