தேடல் - 21

218 17 30
                                    

ஷரூரா : அப்போ நீங்க மனுஷன் இல்லையா...

லியான் : ஹாஹா சூம்மா விளையாடுனேன் ஷரூரா.. அப்டிலாம் எதுவும் இல்ல.

ஷரூரா : உஃப்... சரி நீங்க தான் உயிர் பிழைச்சிட்டீங்கல்ல... உங்களுக்காக காத்திருக்கவங்கள பாக்க நீங்க இப்போவே போனா என்ன...

லியான் : ஹ்ம் போகளாம் ஷரூரா... ஆனா நா கெளம்புனாலும் அவங்கள போய் சேர ஒரு வர்ஷம் ஆகும்...அதனால இந்த ஒரு வர்ஷ டைமிங்ல நா கண்டுப்புடிக்க வேண்டிய சில விஷயங்கள நா கண்டுப்புடிக்கனும்னு நெனைக்கிறேன்...

ஷரூரா : அப்டீன்னா எதுக்காக அன்னைக்கு என்ன நிலாக்கு போக சொன்னதுமில்லாம... எனக்கு தெரியாம நீங்களும் நிலாக்கு வந்தீங்க...

லியான் : அப்போ எனக்கு வேற வழி தெரியல ஷரூரா... அஜி வழியில துடிச்சிட்டு இருக்கும் போது நிரன் ஒரு பக்கம் மயக்கத்துல இருக்கும் போது அவளுக்கு உதவுறதுக்கு அங்க யாருமே இல்ல... பாப்பா... யாரி பாப்பா அழுறத கூட அவளால கவனிக்க முடியல... அதனால தான் அன்னைக்கு வேற வழி இல்லாம நா அங்க போனேன்... நா போனது சரியோ தப்போ யாரி என்ன சரியா அடையாளம் கண்டுப்புடிச்சது ஆச்சர்யம் தான்... சத்யாவ பாத்துட்டு அது நான் தான்னு நெனைச்சி தான் அவ சத்யா கூட வேகமா ஒட்டிக்கிட்டா... அது சத்யாக்கு சந்தேகத்த தொடுக்காத வர நிம்மதி தான்...

ஷரூரா : ஹ்ம் எல்லாம் சரி இங்க என்ன கண்டுப்புடிக்க போறீங்க...

லியான் : ஹ்ம் சொல்றேன் என அவர்களின் உறையாடல் அங்கே தொடர லியான் கூறிய சில விஷயங்கள் ஷரூராவை சற்று அதிர்ச்சியடையத்தான் செய்தது...

குட்டி போட்ட பூனையாய் தன் அறையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த சத்யா எதற்சையாய் அவ்வறையின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த தர்மனின் புகைபடத்தை கண்டான்...

அதில் ஒரு கத்தியும் குத்தப்பட்டிருப்பதை கண்டவனின் நினைவுகளில் அவனின் கண்ணாடி விம்பத்தின் முகம் சுழல அந்த புகைபடத்தின் அருகில் சென்று சிரித்தபடி நின்ற தர்மனை சில நிமிடங்கள் முறைத்தபடி நோக்கினான்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now