தேடல் - 41

199 15 22
                                    

ஷரூராவின் விழிக்கும் கண்கள் இதற்கு மேல் விரிந்தாலும் முளி வெளியே விழுந்து விடும் என குரோபடரான் ராஜாவே பதறும் அளவிற்கு முளித்தவள் ஒரு முறை நன்கு அவர் கூறியவையை ரீவைன் செய்து பார்த்தாள்...

ஷரூரா " என்ன சொல்றீங்க நீங்க? " என நம்பாது மீட்டும் வினவியவளை நோக்கி ஆர்வமற்ற பார்வை ஒன்றை வீசிய குரோபடரான் ராஜா " அவங்கள பத்தி இவ்ளோ தெரிஞ்சு வச்சிர்க்க உனக்கு அந்த குழந்தையும் அவங்க பொண்ணு தான்னு தெரியாதா? " என மறுகேள்வி கேட்டார்...

" நீங்க என்ன ஏமாத்தபாக்குறீங்க.. யாரி அஜிம்சனாவும் நிரனும் மெடர்மான்ல தத்தெடுத்த குழந்தை தான் " என தன்னையே சமாதானம் செய்து கொள்ள முயல " அந்த கொழந்தை மெடர்மான்லையே செத்து போச்சுமா... இப்போ இருக்குர யாரி அஜிம்சனாக்கும் எங்க ப்ரின்ஸுக்கும் ஒரு ஆராய்ச்சியின் மூலமா பிறந்த குழந்தை " என அவர் ஆணித்திரமாய் கூறினார்...

ஷரூராவின் கண்களில் அத்துனை அதிர்ச்சியும் பிரதிபளித்தது... அந்த மழலை ஒரு ஆராய்ச்சியினால் பிறந்தாள் என எண்ணுகையில் நெருடலாய் உணர " மெடர்மான்லேந்து அஜிம்சனா கொண்டு வந்த குழந்தை உயிரோடவே இல்ல.. அந்த குழந்தைய உயிர் பிழைக்க வச்சிர முடியாதுன்னு தெரிஞ்சும் அஜிம்சனா ஒரு வேலை செஞ்சாங்க.. நாங்க அந்த இறந்த குழந்தைய வெளி உலக ஆராய்ச்சிக்கு தான் பயன்படுத்த நெனச்சோம்.. ஆனா அஜிம்சனா அவங்களோட கருவையும் ப்ரின்சோட உயிரையும் கொடுத்து நடக்கவே நடக்காதுன்னு நெனச்சிட்டு இருந்த குழந்தைய முதல் முறையா அழ வச்சாங்க.. அந்த குழந்தை ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படனும்னு நா சொன்னத அவங்க மதிக்கல.. அவங்களுக்கு செயற்கையா பிறந்த அந்த குழந்தைய இந்த ராஜகுடும்பத்து வாரிசா நா ஏத்துக்கவே மாட்டேன்... " என முகமிறுக உரக்கக் கூறியவரை ஒரு நம்ப முடியாத பார்வை வீசினாள் ஷரூரா..

" ஏன் இப்டி கல் நெஞ்சக்காரரா இருக்கீங்க... அந்த குழந்தை உண்மையாவே என்ன தப்புப் பண்ணுச்சு.. அவ.. அவ.. மெடர்மான சேந்தவ... யாருக்கோ பொறந்தவங்குரதால தான் இப்டிலாம் பன்றீங்கன்னு நிரன்லேந்து எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்க ஆனா.. ஆனா நீங்க-" கண்ணீர் மல்க பிதற்றியவளை உணர்வற்று நோக்கிய குரோபடரான் " நா ஒன்னும் கல் நெஞ்சக்காரனெல்லாம் இல்லமா.. எனக்கு என் நிலால உள்ள மக்கள் நல்லா இருக்கனும்... நிலா மட்டும் இல்ல.. பூமி மெடர்மான்னு மூணு கிரகங்களோட உயிர்களும் நிம்மதியா வாழனும்.. நா இந்த மூணு கிரகத்துக்கும் என்னைக்குமே பாரபட்சம் பாத்ததில்லமா.. " என கூறியவரின் குரல் உண்மையில் ஷரூராவை மேலும் குழப்பியது...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz