தன்னை கண்டு முளித்த இருவரில் எவர் குழந்தையென தெரியாமல் சிரித்தான் ஷ்ரவன்.. அவனின் கரம் அவனோடு மோதிய ஸ்வத்தியை பாதுகாப்பாய் பிடித்திருக்க ஸ்வத்தியின் கரங்கள் சனாயாவை பத்திரமாய் ஏந்தியிருந்தது...
ஷ்ரவன் : என்ன பன்றீங்க குட்டி பேபீஸ்...
சனாயா : மா...மா என அவனை பார்த்து அழகாய் கைகளை நீட்டி அழைக்க ஸ்வத்தி அவளை ஷ்ரவனிடம் கொடுத்து விட்டு கைகளை நீட்டி முறுக்கினாள்...
ஷ்ரவன் : சனாயா குட்டி... என்ன டா தூங்கலையா பேபி இன்னைக்கு... அத்தைய ரொம்ப நைட் ட்யூட்டி பாக்க விட்டீங்க போலருக்கே என கண்களை தேய்த்த படி இவர்களை பார்த்து கொண்டிருந்த ஸ்வத்தியை ஒரு கரத்தால் அணைத்த படி பொருமையாய் கேட்க சனாயாவோ புரியவே இல்லையென்றாலும் அவன் வாயசைப்பதையே உன்னிப்பாய் உலக அதிசயமென பார்த்து கொண்டிருந்தாள்...
தன்னை தன்னவன் அணைத்ததும் இதற்காகவே காத்திருந்ததை போல் ஸ்வத்தியின் மனம் சற்று திருப்தியடைந்தது
சனாயா : மா...மா... மா..மா.. என இழுத்து இழுத்து தன்னை அழைத்தவளை பார்த்து
ஷ்ரவன் : என்ன சனாயா குட்டி ... என இவனும் அவளை போலே கேட்க அவன் கன்னத்தை தன் இரு கைகளாலும் பிடிப்பதை போல் கரத்தை பதித்து இன்னும் ஏதோ புரியாத தன் மழலை மொழியில் பேசினாள்...
ஸ்வத்திக்கா : இதத்தான் டா இவ அரை மணி நேரமா பேசிக்கிட்டு இருக்கா... கொஞ்சம் உன் மருமக கிட்ட கேட்டு ட்ரன்ஸ்லேட் பன்னுடா என கண்கள் மூடி அவனின் மீது சாய்ந்திருந்தவள் பாவமாய் கூறவும் ஷ்ரவன் சிரிக்க சனாயா ஒரு புறம் கை காட்டுவதை கண்டதும் அப்புறம் நோக்கிய ஷ்ரவன் அங்கு அந்த பழங்கால மண்டபம் இருப்பதை கண்டான்...
அதை ஒரு சில நொடிகள் பார்த்து கொண்டிருந்தவன் சனாயாவின் அழைப்பில் அவளிடம் திரும்பி அவள் மரபெஞ்சை காட்டுவதை கவனித்தான்...
ஷ்ரவன் : குட்டி பேபிக்கு அங்க போனுமா... சரி சரி வாங்க போவோமா... என ஸ்வத்தியை ஒரு புறம் இழுத்து கொண்டு அந்த மரபெஞ்சருகில் சென்றவன் அங்கே அமர்ந்து கொண்டான்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...