நிலவோடு கதை பேசியவாறு அமர்ந்திருந்த யதீஷ் திடீரென அவனது செல்பேசி அதிரவும் அதை எடுத்து பார்த்தான்.. நேரம் பத்தையும் கடந்திருக்க இந்நேரத்தில் அவனது உதவியாளர் என்றும் அழைக்க மாட்டார் என அறிந்திருந்ததால் அந்த அழைப்பிற்கு பதிலளித்து மறுபக்கமுள்ளோருக்கு வாய்ப்பளித்தான் யதீஷ்...
அவர் நாளைய மீட்டிங் பற்றி அனைத்தையும் கூறவே அவைகளை பற்றி நினைவை கொண்டவன் அடுத்த விமானம் ஒரு மணி நேரத்தில் இருப்பதை கண்டு அந்த இரவில் அரக்க பறக்க கிளம்ப ஓடினான்...
அவன் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து விமான நிலையம் செல்லவே அரை மணி நேரம் எடுக்கும் என்கையில் மற்ற வேலைகளையெல்லாம் செய்து விமானத்தில் ஏறிட முக்கால் மணி நேரமாவது ஆகும்...கேத்ரியனின் நினைவில் அலுவலக விடயங்களை மறந்ததால் வந்த வினை.. ஆனால் அதுவும் அவனுக்கு பிடித்துத் தான் இருந்தது.. இது வரை அவன் எதற்கும் தாமதமாய் சென்றதில்லை..
அதனால் அந்த நேரத்தை அனுபவித்து கொள்ள... நேரமும் ஓடியது... தன் ஓட்டுனரை துரிதப்படுத்தியவன் இதற்கு மேலும் விட்டால் அவர் செல்லும் வேகத்திற்கு பனிரெண்டு மணி விமானத்திற்கு ஒரு மணிக்கு தான் செல்வோமென உணர்ந்த அந்த ஓட்டுனரிடம் கூறிவிட்டு உடனே இடம் மாறி கொண்டான்...
அவரையும் தப்பு கூற முடியாதல்வா... நட்ட நடு ராத்திரியில் எவர் தான் இவ்வாறு எழுந்து வந்து அதுவும் அரை மணி நேர பணத்தை கால்மணி நேரமாக்க கூறினால் ஏற்று கொள்வார்...
யதீஷ் அந்த ஸ்டெயரிங்கை பிடித்ததும் ஓட்டுனர் சீட் பெல்டை பிடித்து கொண்டு அவனை நோக்கினார்.. யதீஷ் ஒரு புன்னகையுடன் அக்ஸலேட்டரை அழுத்தி சீரிப் பாய இன்னும் இருந்த இருவது நிமிட பயணம் அது இரவு நேர ஹைவேஸ் என்பதால் யதீஷின் வேகத்தில் பத்தே நிமிடமாகியது.. அந்த ஓடுனரிடம் ஒரு நன்றியை தெரிவித்து விட்டு தன் உடைமைகளை எடுத்து கொண்டு விமான நிலையத்திற்குள் ஓடினான்...
வெண்முகிலின் நிழல் மண்ணை தொட தன் மஞ்சள் வர்ண கதிர்களை பரப்பி கண்ணிற்கெட்டாது கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்த பனி பொழிவை பூக்களுக்கு காட்டி கொடுத்து தன் வரவினால் சிலிர்க்கச் செய்தான் கதிரவன்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...