நிலவு
லியான் : எந்த குழந்தை பத்தி சொல்றீங்க... என இவன் மிகவும் தீவிரமாய் கேட்டதும் ஒரு நொடி குழம்பிய அப்பெண்மணி உடனே பின் நகர லியானை மேலும் கீழும் கண்டவரின் முகம் ஏதோ ஒரு விஷயத்தினால் வெளிரியது...
அப்பெண்மணி : நீங்க ஏரண் தானே... என்ற கேள்விக்கு அவன் உடனடியாக இடவலதாய் தலையசைக்க அடுத்த நொடி அங்கிருந்து தப்பிக்க முயன்றவரை பிடித்த லியான்...
லியான் : ஒரு நிமிஷம் இருங்க.. நீங்க யாரப்பத்தி சொன்னீங்க.. உங்களுக்கு என்ன தெரியுமா...
அப்பெண்மணி : இல்ல எனக்கு தெரியாது... என்ன விடுங்க...
லியான் : நா உங்கள ஒன்னும் செய்ய மாட்டேன்.. ப்லீஸ் என் சிஸ்டர் இங்க தலைல அடிப்பட்டு சேந்துருக்கா.. அவ எங்க இருக்கான்னு தெரியுமா...
அப்பெண்மணி : அந்த ப்லூ கலர் தலை முடி வச்சிருந்த பொண்ணா... என தயங்கி தயங்கி அவர் கேட்க லியான் அமோதித்ததும் அதே அறையிலிருந்த வேறொரு அறையை காட்டி விட்டு விட்டால் போதுமென அவர் அங்கிருந்து செல்ல ஏதோ ஒரு காரணத்திற்காக அவனின் கடிகாரத்தை அவரின் உடையின் ஒரு சிறிய பக்கெட்டில் மறைத்திருந்தான் லியான்...
தமிழகம்
இவர்கள் எதிர்பார்த்ததை விடுத்தும் மிகவும் விரைவாகவே வியோனாரை நம் நாயகர்கள் கண்டுப்பிடித்திருக்க முழுதும் அடர்ந்த பச்சையினால் படரப்பட்டு சூழ்ந்திருந்த அந்த கிரகம் அப்போதும் அத்துனை அழகாய் தெரிந்தது...
நம் சூரியனை விடவும் நான்கு பில்லியன் வயது முதிர்ந்த சூரிய குடும்பம் அது.. கிட்டத்தட்ட நமது சூரியன் உருவான போதே வியோனார் உருவாகியிருக்கக் கூடுமென நரா மற்றும் தில்வியா மீனாவுடன் விளக்கிக் கூறிக் கொண்டாருந்ததை அனைவரும் ஆச்சர்யமாக கேட்டு கொண்டிருந்தனர்...
ஐந்தே நிமிடத்தில் ஆர்வின் வியோனாரின் ஒரு ஆழ்ந்த பகுதியிலே அந்த ரேடார் பத்திரப்படுத்தப் பட்டிருப்பதை கண்டறிய தற்போது அந்த ரேடாரை எவ்வாறு செயலிழக்கச் செய்வதென்பதை அறியாது அனைவரும் ஒருவரை ஒருவர் நோக்கினர்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...