தேடல் - 7

631 29 146
                                    

அந்த இருள் நிறைந்த அறையில் ஒரு நீல நிற ஒளியின் முன் அமர்ந்திருந்தான் ப்ரின்ஸ்... அவனது முகம் பலவகையான உணர்ச்சிகளை கலவையாய் காட்டி கொண்டிருக்க அவன் கண்களோ அவன் கரத்திலிருந்த ஒரு சில காகிதத்தையே நோக்கிக் கொண்டிருந்தன..

அவனின் மனதை ஊடுருவும் கண்களிள் ஒரு விதமான குழப்பமும் வருத்தமும் கலந்திருந்தது.. அந்த காகிதத்தை டேபிலில் வைத்து விட்டு தன் தோள் வரை வளர்ந்திருந்த கேசத்தை கோதி பின்னுக்கு தள்ளினான்...

கண்களை இறுக்கி மூடி தன் கதிரையில் சாய்ந்தமர்ந்தவனின் அதரங்கள் ஏதோ ஒரு பெயரை உச்சரிக்க அவன் கரம் தனிச்சையாகவே இறுகி கொண்டது...

ப்ரின்ஸ் : உன்ன போக நா அனுமதிச்சிருக்கக் கூடாது.. தப்பு பன்னிட்டேன்... என கரகரத்த குரலில் கூறியவனின் மூடிய இமைகளின் வழியே கண்ணீர் கசிய ஒரு சில நொடிகள் அவ்வாறே அமர்ந்திருந்தவன் பின் பெருமூச்சை இழுத்து கொண்டு தன் கண்ணீரை துடைத்து விட்டு எழுந்து சென்றான்..

அவன் கால்கள் தனிச்சையாக தான் காலையில் சென்ற அதே அறை முன் சென்று நிற்க ஒரு யோசனையுடன் அந்த கதவின் பிடியை பிடித்த உடன் அக்கதவு அவனுக்கு தானாய் வழி விட அவன் மனதில் " நான் என்றும் அவளவன் தானே " என்ற எண்ணம் தோன்றி மறைந்தது...

அந்த அறைக்கதவை மீண்டும் மூடியவன் தன் கண்களால் அந்த அறையை துளாவ அந்த கும்மிருட்டிலும் அவனால் அவன் நின்றிருந்த சுவரோடு ஒட்டி போடப் பட்டிருந்த கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளின் வதனத்தை காண முடிந்தது...

இரவு நேரங்களில் அங்கு எந்த விதமான இயற்கை ஒளியும் இருக்காது.. ஏனெனில் அவர்கள் வாழ்வதே இயற்கை ஒளியில் தான்..

மெதுவாய் அவளருகில் சென்று நின்றவனுக்கு அவன் கழுத்தில் கிடந்த நீல டாலரின் ஒளியில் சனாவின் அமைதியான முகம் காட்சி கொடுக்க அவளின் கன்னத்தை மென்மையாய் வருடியவன் மெதுவாய் குனிந்து அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் முத்தம் பதித்தான்..

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now