தேடல் - 45

182 13 44
                                    

நிலவு

தரையில் விழுந்த ஷரூராவின் வாட்ச் அடுத்த நொடியே செயலை இழக்க அவளின் பின் ராடோடு நின்றிருந்தார் வெள்ளை உடையில் பச்சை கண்ணாடியுடன் இருந்த ஒரு விஞ்ஞானி...

அவரின் கண்கள் ஷரூராவை முழுதாய் அளவெடுக்க ஷரூராவின் நீல நிற கூந்தலும் சற்றே வெளுத்தே காணப்பட்ட அவள் தோலும் அவரின் மூளையில் ஏதேதோ எண்ணங்களை வலுவூட்ட " ராஜா பேச வராது காது கேக்காதுன்னு சொன்னாரு... யாருட்ட இந்த பொண்ணு இப்டி அழுது பேசீட்டு இருந்துச்சு " என அந்த அறையை நோட்டமிட்டவர் எதற்சையாய் ஷரூராவின் கடிகாரத்தையும் கவனிக்க தான் வந்த வேலையை நினைவு படுத்தி அவள் கரத்திலிருந்து அதை அவிழ்க்க முணைந்தார்...

ஆனால் அதன் வாரை அவர் அவிழ்க்க முயன்ற அடுத்த நொடியே எமர்ஜென்சி அலாரமையே அழுத்தியதை போல சிகப்பு நிறத்தில் அந்த கடிகாரம் ஒளிர அதை அவிழ்க்க வேண்டுமெனில் சரியான ஃபிங்கர் ப்ரின்ட் இருந்தாலே திறப்பேனென பிடிவாதம் பிடிக்காத குறையாய் விரல் அச்சை பதிக்கும் இடத்தை தவிர்த்து மற்றெங்கிலும் தொட்டால் எரியும் அளவிற்கு எரிந்து கொண்டிருந்தது...

அந்த ஃபிங்கர் ப்ரின்ட்டின் அளவை வைத்து அவளின் ஆல் காட்டி விரலாகத் தான் இருக்குமென எண்ணி அவர் ஷரூராவின் வலது கரத்து ஆள் காட்டி விரலை பதிக்க அது தவறு என்பதை சொல்லாமல் சொல்ல இன்னும் அடர்ந்த சிகப்பு நிறத்தில் ஒளிர்ந்தது...

இவர் குழப்பத்தோடே பெருவிரலை விடுத்து மற்ற மூன்றையும் வைத்து பார்க்க அவையும் தவறென்றே வர... கடைசியாய் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது அதற்கு மேல் அந்த கடிகாரமே மொத்தமாய் டிஃப்யூஸ் ஆகிவிடும் என்ற போது எப்படியும் இதுவாகத் தான் இருக்கும் என தைரியமாய் ஷரூராவின் பெருவிரலை அவர் வைக்க அதுவும் தவறென கூறி இருந்த இறுதி வாய்ப்பையும் இழந்தார்...

அவருக்கெங்கு தெரிய போகிறது.. அது விரல் அச்சு அல்ல... நகம் அச்சு என்று... குரோபடரான் ராஜா தான் செய்த செயலுக்கு துவைத்து தொங்க விடப் போகிறார் என புலம்பிக் கொண்டிருந்த அந்த விஞ்ஞானி சில பல புலம்பல்களை புலம்பித் தீர்த்தப் பின் காவலர்களை அழைத்து ஷரூராவை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூறினார்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora