தேடல் - 22

237 18 83
                                    

அஜிம்சனா : ஏன் இரெண்டு பேரும் பாக்காத அதிசயத்த பாத்த மாரி இப்டி முளிக்கிறீங்க ... யாரையாவது கொல்ல ப்லன் பன்றீங்களா அப்டீன்னா சொல்லுங்க நா என் பொண்ண தூக்கீட்டு அப்டியே போய்டுறேன் என யாரியை மறுபுறமாய் வைத்து கொண்டு காட்டமாய் கூற யாராயோ சத்யாவிடம் செல்ல வேண்டி தன் அன்னையின் கரங்களில் நெழிய சத்யா முன் வந்து யாரியை வாங்கி கொண்டான்...

சத்யா : அதெல்லாம் இல்ல அஜிமா... சும்மா தான் பேசீட்டு இருந்தோம்...

அஜிம்சனா : ஓஹ் ஆமா அதென்ன அண்ணா ஏதோ கட்டம் செவுத்துல... ஆர்ட் ப்ரக்டிஸ் பன்றியா என்ன

யதீஷ் : இல்ல சிஸ்டர் அது எப்டி வந்துச்சுன்னே சத்யாக்கு தெரியலையாம்

சத்யா : ஆமா அஜிமா... இது லியான் பன்னீர்ப்பான்னு நெனைக்கிறேன் என தன் கேசத்தை பிடித்து இழுத்தபடி சிரித்து கொண்டிருந்த யாரியை திசை திருப்புவதற்காக எக்குத்தப்பாய் யோசிக்காமல் தன் மறு கத்திலிருந்த கத்தியை யாரியிடம் கொடுத்தான் சத்யா

அதை பார்க்காத பொருளை கண்டதாய் கண்களை அழகாய் விரித்து இரு கரத்தாலும் அதன் மரப்பிடியை பிடித்து யாரி சுற்றி பார்க்க அந்த கத்தியில் லைட்டின் வெளிச்சம் பட்டு மின்னவும் யாரியின் கண்களும் அழகாய் மின்னியது

அஜிம்சனா : டேய் அண்ணா லூசா டா நீ... எதடா புள்ள கைல குடுக்குர என வேகமாய் பிடுங்க வர உடனே யாரி அதை விடாமல் சத்யாவின் கழுத்தருகில் வைத்து கொண்டு தன் அன்னையை பார்த்து முகத்தை அழகாய் சுருக்கினாள்...

அவளுக்கு நிகராக அஜிம்சனாவும் முகத்தை சுருக்க அதை கண்டு சிரித்த சத்யா

சத்யா : நத்திங் டு வர்ரி டா... அது டம்மி கத்தி தான்.. ஐ மீன் ஷார்ப்பெல்லாம் இல்ல... பாப்பாக்கும் ஒன்னும் ஆகாது என்கவும் அதை புரிந்து கொண்டதை போல யாரி அந்த கத்தியால் சத்யாவின் கற்றை கேசத்தை சுற்ற அவ்வயதிலே அக்குட்டி வாண்டு சத்யாவின் கேசத்தை கர்லிங் செய்ய முயல்வதை யதீஷ் சத்தமின்றி தன் கமாராவில் படம்பிடிக்க தொடங்கினான்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant