தேடல் - 6

735 29 75
                                    

சைத்தான்யாவின் முகத்தில் யதீஷை கண்டதும் ஒரு புன்னகையை சூடிக் கொண்டது..

அலுவலக விடயங்களை பேசி முடித்ததும் சாதாரணமாய் இருவரும் உரையாட யதீஷிற்கு சைத்தான்யாவின் வெளிப்படையான குணமும் நட்பான பேச்சும் மிகவும் பிடித்திருந்தது...

ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் ஏதேதோ உரையாடி கொண்டிருந்தவர்களுக்கு குளிர் பானம் எடுத்து வந்த ஊழியரின் கடிகாரத்தில் நன்பகல் மணி பனிரெண்டானதாக டிக்டிக் என கேட்ட சத்தத்திலே நேரத்தை கவனித்தனர்...

சைத்தான்யா : இட்ஸ் கெட்டிங் லேட் யதீஷ்.. டோன்ட் டேக் மி ராங் .. நா கெளம்பனும் என கடிகாரத்தை பார்த்தவாறு எழுந்தவனுடன் எழுந்து கொண்ட யதீஷ்

யதீஷ் : இட்ஸ் ஓக்கே சைத்தான்யா . ஐ கன் அண்டர்ஸ்டண் என புன்னகையுடன் கூற ஒரு சிறிய அணைப்பின் பின் சைத்தான்யா அங்கிருந்து வெளியேறச் சென்றான்... யதீஷ் அவனை வழியனுப்ப அவனுடனே வர திடீரென தன் கார் சாவியை காணாமல் அதை அவையில் தான் வைத்திருக்க வேண்டுமென மீண்டும் சைத்தான்யா அந்த அவைக்குள் நுழைந்தான்...

யதீஷின் மடிக்கணினி பையின் அருகிலிருந்த தன் கார் சாவியை எடுத்து கொண்ட சைத்தான்யா எதற்சையாய் யதீஷின் மடிக்கணினி பையிலிருந்து ஒரு புத்தகம் நீட்டி கொண்டிருப்பதை கண்டான்...

மதி மர்மம்

அதை ஒரு நொடி சமைந்து நின்று கண்டவனுக்கு ஏதேதோ நினைவலைகள் மோதி விட்டுச் செல்ல அவனை மேலும் சிந்திக்க விடாது அந்த அறைக்குள் நுழைந்த யதீஷ் கதவிடையே நின்று கொண்டே " சைத்தான்யா " என அழைத்தான்..

சைத்தான்யா : யா யா ஹியர்.. இருக்கு யதீஷ்.. சோ நா கெளம்புறேன் பாய் .. வில் மீட் யு சூன் என படபடவென கூறி விட்டு வெளியேற யதீஷும் எதையும் கவனிக்காமல் அவனை பின் தொடர்ந்து வந்து அவனை வழியனுப்பினான்...

தன் காரின் கன்னடி வாயிலாக யதீஷை நோக்கிய சைத்தான்யாவின் புருவங்கள் முடிச்சிட அடுத்த சில நொடிகளில் அவன் கார் அருகிலிருந்த ஒரு புத்தக கடையில் நின்றது..

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora