எட்டு வழிச் சாலையில் சீரிப் பாய்ந்து கொண்டிருந்த நாயகர்களின் காரை சில கார்கள் யதீஷின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முயன்றபடி பின் தொடர்ந்து வர தன் கட்டுப்பாட்டை இழக்கும் ஒரு வேகத்தில் காரை ஓட்டி கொண்டிருந்த யதீஷ் திடீரென பெருமூச்சு விட்டவனாய் ப்ரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான்...
அவர்கள் முன் சீரி வந்து மண்ணை தேய்த்து கொண்டு நின்றது அந்த கருப்பு காவல் வண்டி... அதிலிருந்து கை துப்பாக்கியுடன் கம்பீரமாய் இறங்கிய ஷ்ரவனை கண்டதும் இந்நாழ்வரும் அசால்ட்டாய் திரும்பி பார்க்க அவர்களை இவ்வளவு நேரமும் தொடர்ந்து வந்த மூன்று கார்களும் ஒரேடியாய் ரிவர்ஸிலே பின் சென்று கொண்டிருந்தது...
வேகமாய் முன் சென்று காருக்குள் அமர்ந்திருந்த வினய் மற்றும் யதீஷிடம் இரு துப்பாக்கிகளை தூக்கி எறிந்த ஷ்ரவன் செல்லும் கார்களை நோக்கி குறி வைக்க யதீஷ் மற்றும் வினயும் ஷ்ரவனை தொடர்ந்து மற்ற இரு கார்களை குறி வைத்தனர்...
ஷ்ரவன் முதல் காரின் முன் டயர்கள் இரண்டையும் ஒரே நொடியில் சுட அவனை தொடர்ந்து யதீஷ் மற்றும் வினயும் மற்ற இரு கார்களின் சக்கரத்தை பன்ச்சராக்கினர்...
உள்ளிருந்தவர்கள் காரை விட்டு விட்டு ஓட அதில் இருவரின் காலை சுட்டு பிடித்த ஷ்ரவன் இறுதியாய் யதீஷ் சுட்ட காரில் வெளியே வர முடியாமல் மாட்டி கொண்ட ஒருவனையும் சேர்த்து பிடித்தான்...
இங்கு வீட்டில் அனைவரும் அஜிம்சனாவை சுற்றி வளைத்து அதிர்ச்சியோடு நின்றிருக்க விட்டால் ஃத்வருணால் திண்டாடிய மற்ற விஞ்ஞானி நாயகர்கள் அவள் காலில் விழுந்து அழுதிருப்பர்...
இன்னும் அஜிம்சனா புரியாது விழித்தபடி நிற்கவும் அதற்கு மேலும் தாமதிக்க விரும்பால்
தாரா : அது என்னன்னு படி சீக்கிரம் டி...
அஜிம்சனா : அதுல என்ன இருக்குன்னே தெரியாம தான் இத வச்சிருந்தீங்களா.. ஆமா என்ன இது...
ஃத்வருண் : இது தான் குட்டிமா லியான் இங்க விட்டுட்டு போனது....
ČTEŠ
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Sci-fiஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...