அஜிம்சனாவையே அனைவரும் சுற்றி நின்று அந்த காகிதங்களை நோக்கி கொண்டிருக்க அஜிம்சனா ஏதோ நினைவு வந்தவளாக நிரனை தொடர்பு கொள்ள முயன்றாள்...
சத்யா : என்ன பண்ண போற அஜிமா...
அஜிம்சனா : நிரனுக்கு பூமிக்கு வர சொல்லனும் அண்ணா... அவன் ஏதோ ஒரு விஷயத்த வர்ஷக் கணக்கா நம்ம கிட்டேந்து மறச்சிக்கிட்டு இருக்கான்... அது என்னன்னு கேக்கனும்.. அதோட அது நாம தேடுர விஷத்தோட ஒத்து போகும்னு நெனக்கிறேன்...
நரா : என்ன டி சொல்ல வர...
ராவனா : நானும் கவனிச்சேன் டி... நிரன் அண்ணா இந்த டாக்குமென்ட் பத்தி பேச ஆரம்ச்சதுலேந்தே நெர்வசா தான் இருந்தான்... லியான் அண்ணா வச்சத நாம கண்டுப்புடிச்ச கொஞ்ச நாள்ளையே ஏதேதோ சொல்லி தன்னந்தனியா மெடர்மான்க்கு போய்ட்டான்... டஸ் இட் மேக் சென்ஸ்???
அஜிம்சனா : எக்ஸக்ட்லி.. பட் அதோட நாங்க நிலாலேந்து வர்ரதுக்கு முன்னாடி நிரனோட லப்ல நா ம்யோரா நா அத பாதி தான் படிச்சேன் ஏன்னா அவன் கிட்ட நிறைய டாக்குமென்ட்ஸ் இருந்துச்சு... எல்லாமே மிக்ஸாயிருந்ததால நா எத கரெக்ட்டா படிச்சேன்னு கூட எனக்கு புரியல...
தில்வியா : உனக்கு நியாபகம் இருக்குரத சொல்லு டி
அஜிம்சனா : ம்ம்ம் சரியா புரியல டி எனக்கு... ஏதோ ஒரு கிரகம் கிட்ட தட்ட ஒரு 25 வர்ஷத்துல பேரழிவ சந்திக்கும்... அந்த ஒரு சம்பவத்துனால மூன்று கிரகத்தோரும் அழிவாங்கன்னு இருந்துச்சு...
தாரா : மூன்று கிரகமா... அப்போ இத எழுதுனவங்களுக்கு பிரவஞ்சத்துல இருக்க மூணு கிரகத்துல மனிதர்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சிருக்கா???
அரானா : இதனால என்ன தாரா...பூமிலையும் மெடர்மான் னையும் தான வேற உயிர்வாழ் கிரகங்கள் இருக்குரது தெரியாது... நிலால உள்ளவங்களுக்குத் தான் தெரியுமே...
" ஆனா தானே நிலால உள்ளவங்களுக்கு பூமி மெடர்மான பத்தி தெரிஞ்சு முழுசா இருவது வர்ஷம் கூட ஆகலையே" என சத்யா மனதில் எண்ணி கொண்டான்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...