வியோனார்
நிரன் : என்னாடா மச்சான் அது??
லியான் : அது தான் வியோனார்க்கே பவர் ஸப்லை பன்ற டவர் டா... அதுவே பவரில்லாம இருக்கு... நா தர்மனோட விண்டுமில் ஆர்கனிசேஷனோட மெய்ன் விண்டுமிலோட கனெக்ஷன கட் பண்ணதும் எல்லாத்துக்குமே பவர் கட்டாச்சு பாத்தியா அந்த மாரி தான்...
டிவின் : ஓஹ் அதெல்லாம் கூட நியாபகம் இருக்கா உனக்கு என அவனை பார்க்க லியான் முறைத்த முறைப்பில் பட்டென திரும்பி கொண்டான்...
நிரன் : சரி சரி இந்த டவர்ல இப்போ ஃப்யூஸ் போனதால மத்த இடத்துலையும் ஃப்யூஸ் போய்ர்க்கும்னு சொல்ற அதான???
லியான் : ஹான் அதான்... இப்போ என்ன பன்றது...
டிவின் : டேய் கொஞ்சம் மூச்சு விடு டா... பொருமையா யோசி.. இப்டி பறந்துட்டே இருந்தீன்னா உன் மூளைக்கெற்ற கொஞ்ச நஞ்ச நியாபகமும் அப்டியே போய்டும்... பைய யோசி டா... எதாவது நியாபகம் வருதா பாரு... ஷரூரா சொன்னது... இல்லனா நீ இந்த கிரகத்த பத்தி ஆராய்ச்சி பன்னது... இப்டி எதாவது... என அசுவாசப்படுத்தி அமர வைக்க அப்போதும் லியான் படபடப்பிலே இருக்க மற்ற இருவரும் சிந்திக்கலானார்கள்...
நிரன் : டேய் எதுக்காக டா வியோனார் வந்த என பட்டென கேட்க அதற்கு உரிய பதிலை ஓரிரு நொடிகள் சிந்தித்த லியானின் கண்கள் பளபளத்தன.
லியான் : நா அப்பா அம்மாவ தேடி தான் டா இந்த கிரகம் இருக்கும்னு கெஸ் பண்ணேன்... ஏன்னா மெடர்மான் ஆடிட்டோரியத்துல இருந்த பல விஷயங்களுக்கு மத்தியில எனக்கு வியோனார பத்தின குறிப்புகள் கெடச்சிது... அப்போ தான் நா இந்த கிரகம் இருக்கான்னு உறுதி செய்யனும்னு நெனச்சேன்...
நிரன் : சரி லியான்.. தெளிவா கேட்டுக்கோ... உனக்குத் தெரியும் நீயும் சத்யாவும் ட்வின் பிரதர்ஸ்னு.. ஆனா உனக்கு இன்னோறு தங்கச்சியும் இருக்கா... அப்ரம் உங்க அம்மா பேரு அமூரா.. அவங்க தான் இந்த டாக்குமென்ட்ஸ் எல்லாத்தையும் எழுதுனாங்க... என திடுதிபுவென இவன் உண்மைகளை போட்டுடைக்கவும் லியான் அவனை சிறிது அதிர்ச்சியோடு பார்த்தாலும் அவனின் இதயம் பல்வேறு விதமான ட்விஸ்ட் அண் டர்ன்களை பார்த்து வந்ததால் இப்போது இவையெல்லாம் பழக்கமாகியிருந்தது...
KAMU SEDANG MEMBACA
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Fiksi Ilmiahஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...