தேடல் - 37

239 18 27
                                    

தன் கையிலிருக்கும் ஒளிரும் முட்டையை கவனிக்காது அதை ஒரு ஓரமாய் வைத்து விட்டு தன் நண்பனை தேடி மாடி ஏறினான் ஆர்வின்... அவனூடே யதீஷும் இம்முட்டையை மறந்து விட்டு மாடிக்கு ஓடினான்...

அங்கு ஃத்வருண் ஒரு அறை கதவை உடைத்தானா திறந்தானா என கேள்வி எழுப்பும் வகையில் திறந்திருந்த அறைக்குள் ஒரு மரட்ராயரை கீழே போட்டு விட்டு ஒரு க்ளஸ் கவரை வைத்து கொண்டு தீவிரமாய் அதை கண்களாலே ஆராய்ந்து கொண்டிருந்தான்...

தன் சகோதரன் ஒரு வருடம் களித்து கோமாவிலிருந்து எழுந்த மகிழ்ச்சியில் ஆட்டமாய் ஆடிக் கொண்டிருந்த சைத்தான்யா அவன் மயக்கமுறும் முன் செய்த அட்டகாசத்தையெல்லாம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை... முபல்லனிற்கு தானே தெரியும் உண்மையில் என்ன நடக்க உள்ளதென்று...

அதி நவீன நிலவு

மூன்று சுவற்றிற்குள்ளே மற்றைய புறத்தை இரும்பால் அடைத்த கம்பிகளின் பின் பிணை கைதியாய் சிறை வைக்கப்பட்டிருந்தாள் ஷரூரா... அவளின் கண்கள் அவளது சிந்தனைக்கேற்ப ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலையாடிட அவள் முன் கம்பீரமாய் நின்றிருந்த ராஜா குரோபடரானுக்கோ அவள் தப்பிக்க வழி தேடுவதை போல் தெரிந்தது போலும்...

ஷரூராவின் நீல கூந்தலும் சற்றே வித்யாசமாய் இருக்கும் அவளும் குரோபடரானை அரித்து கொண்டே இருக்க அதை உள்ளுக்குள் வைத்திருக்க இயலாமல்

குரோபடரான் : என்னமா...தப்பிக்க வழி தேடீட்டு இருக்கியோ என வினவவும் அவனை நிமிர்ந்து ஒரு புரியாத பார்வை பார்த்தாள் ஷரூரா...

குரோபடரான் : என்ன அப்பாவி மாரி இருந்தா தப்பிச்சிடலாம்னு பாக்குறியா... இரெண்டு வாரத்துக்கு (நிலவின் கணக்குப்படி 12 நாட்கள் பூமியில் ஒரு வருடம்) முன்னாடி உன்னால தான் இந்த நிலவோட ப்ரின்ஸ் ஃபாஹிர் நிரன நாங்க தொலச்சோம்

அவளின் புருவங்கள் இரண்டும் ஒன்றோடொன்று முடிச்சிட்டிருக்க கண்கள் அவர் கூறுவதை கவனிப்பதை போல் கூர்ந்திருந்தது....

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora