தேடல் - 60

919 17 93
                                    

வியோனார்

தான் விட்டு சென்றபடியே இருக்கும் தன் வீட்டை கண்டு இவர்கள் எடுத்து வந்த அந்த புகைபடமிருக்கும் சுவற்றருகில் சென்ற ஷரூரா அதிலிருந்த தனது புகைபடத்தையும் தன் பெற்றோர் புகைபடத்தையும் பார்த்தவாறு ஓரக்கண்ணால் அங்கு லியான் இருந்ததற்கான ஏதேனும் அயாளமிருக்கிறதா என சோதித்து பார்த்தாள்...

நல்ல வேளையாக இவ்விருவரும் பயன் படுத்திய மின்சாதன கருவிகளையடுத்து சந்தேகிக்கும் படியாக வேறெதுவும் அங்கில்லை... லியான் இங்கிருந்து செல்லும் போதே தன் கடிகாரம் மொதற்கொண்டு அனைத்தையும் அள்ளி கொண்டு தான் சென்றான்...

" இந்த வீடு உண்மையாவே யாரோடது? " என திடீரென கேட்ட ஃத்வருணை நோக்கிய ஷரூரா அவனின் கேள்வி புரியாது விழிக்கும் மற்ற இருவரையும் பார்த்தவாறே தானும் அந்த வீட்டை சுற்றி பார்வையை சுழல விட்டவள் அவன் எதை குறிப்பிடுகிறான் என புரிந்து கொண்டதும் அவனின் புத்தி கூர்மையை எண்ணி வியந்தவாறே " இது என்னோட வீடு... " என பதிலளித்தாள்...

தாரா " உங்க அப்பா அம்மா எங்க ஷரூரா?? " என நீண்ட அமைதியின் பின் குரலெழுப்ப ஷரூராவின் முகம் அந்த கேள்வியில் தோய்ந்ததை மூவருமே கவனித்தனர்... " நா இங்க தனியா தான் இருக்கேன்... தனியா தான் வளந்தேன்... அவங்க ஒரு தீ விபத்துல போய்ட்டாங்க என்ன... எங்கள விட்டு போய்ட்டாங்க " என எங்கோ பார்த்தவாறு கூற ஃத்வருணுக்கு எங்கிருந்தோ வந்திருந்த ஒரு நம்பிக்கை சுக்கு நூறாய் உடைந்திருந்தது...

அந்த செய்தி அவனின் மனதின் அடி ஆளத்தை தொட்டு விட்டு மீள்வதற்குள்ளாக ஒரு சிறு கண்ணீர் துளி அவனின் இடது கண்ணிலிருந்து தப்பி வந்து அவனின் கன்னத்தில் தடம் புரண்டோடியது... மற்ற இருவரும் கூட அதே செய்தியில் செய்வதறியாது ஃத்வருணை நோக்க இத்துனை வருடமாய் தனக்கென நண்பர்களை தவிற வேறெவரும் இல்லை என எண்ணியவனுக்கு பெற்றோரும் இரு தங்கைகளும் இருக்கின்றனர் என தெரிந்த குறுகிய நேரத்திலே அவனின் பெற்றோரும் மொத்தமாய் விட்டு சென்றதோடு தங்கை ஒருத்தி எங்கிருக்கிறாளென்றே தெரியாது நிற்கும் அவனின் நிலை இவர்களையும் கவலைக்குள்ளாக்கியது...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now