தமிழகம்
நீண்ட அமைதி நிலவிய அந்த அறையில் திடீரென கதவு திறக்கும் சத்தமும் ஒரு சின்ன அழுகையின் சத்தமும் கேட்க கதவிற்கு சற்று அருகிலே இருந்த ஃத்வருண் வேகமாய் அப்புறம் திரும்பி பார்த்தான்...
அங்கு உறக்கத்திலிருந்து எழுந்து விட்டு அரைகுறை தூக்கத்தில் கண்களை தேய்த்த படி யாரையும் காணாமல் பயத்தில் அழுகையுடன் தத்தி நடந்து வந்தாள் சனாயா...
" அ..மா.. " என்ற சனாயாவின் அழுகை அனைவரையும் மறுபுறம் ஈர்க்க ஃத்வருண் ஓடிச் சென்று அவளை தூக்கி சமாதானம் செய்யத் தொடங்கினான்... அரை தூக்கத்தில் இருந்ததனாலோ என்னவோ அவனின் கழுத்தை தன் குட்டி கரங்களால் கட்டி கொண்டாள்... தன்னை சாய்த்து அவன் மெதுவாய் ஆட்டி சமாதானம் செய்யத் தொடங்கிய போதே சனாயா மீண்டும் உறக்கத்தை தழுவினாள்...
அக்காட்சியை பார்த்து கொண்டிருந்த சத்யாவின் மனதில் புதிதாய் ஒரு எண்ணம் நுழைய அவனின் கண்கள் மெதுவாய் யதீஷின் நெஞ்சில் சாய்ந்து கை சப்பிக் கொண்டிருந்த யாரியின் மீது பதிந்தது...
இவர்கள் அறிந்தவை தான்... யாரி இங்கு வந்தது முதலில் இருந்து இப்பொழுதும் சரி அஜிம்சனா நிரன் மற்றும் சத்யாவை தவிர்த்து எவரிடமும் அழாமல் இருந்ததில்லை...
இப்பொழுதும் யதீஷை கண்டாலே கத்தி அழுபவள் அவனை கண்டு பழகியதால் அவனிடம் அழாதிருக்கிறாள் ஆனால் முதல் முறை சத்யா ஒரு வருடம் முன் வீட்டிற்கு வந்த போது அவனை அடையாளங்கண்ட யாரி அதற்கு முன் ஒரு முறை கூட உண்மையில் சத்யாவை பார்த்ததில்லை...
" இட்ஸ் ஃபீல்ஸ் ஸ்ற்றேஞ்... யாரி எதனால அஜி நிரனுக்கு அப்ரம் என் கிட்ட அழாம இருக்கா? " என சம்மந்தமே இல்லாமல் திடீரென அவன் கேள்வி எழுப்பவும் அனைவரும் அவனை நோக்க யாரி கூட தன் பெயர் அடிப்பட்டதால் பட்டென தலை தூக்கி சத்யாவை நோக்கினாள்...
சத்யாவின் பார்வையும் அவள் மீதே பதிந்திருப்பதை கண்டதும் கைகளை நீட்டி " மா..மா " என யாரி ஆசையாய் அழைக்க இப்போது சத்யாவின் கேள்வி மற்றவர்களுள்ளும் எழுந்தது...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...