மெடர்மான்
நிலத்தில் சரிந்த இருவரையும் நோக்கி மற்ற ஏழ்வரும் பதட்டத்தோடு ஓடி வர மீரா பயத்தில் கத்தி அழவே தொடங்கியிருக்க ஒரு கத்தலுடன் இடையை இறுக்கி பிடித்தபடி ஒரு கையை ஊன்றி எழுந்தான் ஃத்வருண்...
இன்னமும் சக்தி நிலத்திலே படுத்திருக்க அவனை மெதுவாய் உலுக்கி மீரா அழ பல்லை கடித்து கொண்டு அவளை நோக்கிய ஃத்வருண் தங்களை சுற்றி நோக்க வெடித்து சிதறிய அந்த ரேடாரின் பகுதிகளில் ஒன்று ஆழமாய் ஃத்வருணின் தோள் பகுதியை கிளித்திருந்தது...
மீராவின் உலுக்கலில் பட்டென கண்களை திறந்த சக்தி சடாரென எழுந்தமர அவன் எழுந்த வேகத்திற்கு மீண்டும் கீழே விழும் முன் அவனை மித்ரான் தாங்கி பிடித்தான்...
சக்தியின் முதுகில் ஒரு கம்பி சொருகிக் கொண்டிருந்தது... அதை மித்ரான் வேகமாய் பிடுங்கி எறிய சக்தி கையை இறுக்கி பிடித்து கொண்டு வேகபெருமூச்சுகள் விட அழுது கொண்டே இருந்த மீராவை ஃத்வருண் ஒரு கரத்தால் அணைத்து சமாதானம் செய்ய முயன்றான்..
" டேய் டேய் நா நல்லா இருக்கேன் டா... எதாவது ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போங்க.. " என சக்தியே அவனின் சட்டையை களட்டி முதுகில் கட்டி கொள்ள இவனுக்கு முதலுதுவி கூட செய்ய இயலாமல் அனைவரும் பதறி கொண்டிருந்தனர்...
" ஏ செய் ஏன் இப்போ எல்லாம் குதியா குதிச்சிட்டு இருக்கீங்க... சும்மா இருங்க மொதல்ல " என சக்தி பொருமை இழந்து ஒரு அதட்டு அதட்டவும் இவர்கள் அனைவரும் கப்சிப்பென வாயை மூடி கொண்டு அவனை நோக்கினர்... " டேய் மொதல்ல ஒரு கர்சிஃப கைல கட்டித் தொலடா அப்டியே உக்காந்துருக்கான் " என சக்தி ஃத்வருணை திட்டிக் கொண்டே அவன் மெதுவாய் எழுந்து நிற்க " ஏன் டா அண்ணா அப்போ நா அழுததெல்லாம் வேஸ்ட்டா? " என மீரா கண்ணீரோடே கேட்டாள்...
" அய்யோ நாங்க நல்லா தான் இருக்கோம் பாப்பா... எந்திரி நீ... ஏன் அழுகுர வா பூமிக்கு போக வேண்டியது தான் " என சக்தி அவளை பேசவே விடாமல் எழுப்பி நிற்க வைத்து மற்றவர்களுக்கும் கண் காட்ட ஃத்வருண் சக்தி கூறியதை போலவே கை குட்டையால் தன் கரத்திலிருந்த காயத்தின் மீது இறுக்கி கட்டிவிட்டு எழுந்து நின்றான்...
BINABASA MO ANG
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...