தேடல் - 20

211 16 1
                                    

ஷரூரா : காதலா... ஹலோ பாஸ்.. அங்க உள்ளவங்க யாருக்கும் நீங்க யாருன்னு இன்னமும் தெரியல... சத்யனுக்கே நீங்க அண்ணன்னு நான் சொல்லி தானே தெரியப்போகுது.. என கேட்கவும் சீரிச் சென்று மின்னிய வட்ரனின் மீதிருந்த பார்வையை திருப்பி அவளை நோக்கி புன்னகைத்தான் லியான்...

லியான் : எனக்கே நான் யாருன்னு லேட்டா தான் தெரிஞ்சிது ஷரூரா... அதோட என் பேரு தான் சாகித்யன்னு அவங்களுக்கு தெரியாதே தவிற.. லியான அவங்களுக்கு தெரியும்

ஷரூரா : லியானா... அது யாரு... ஓஹ் ப்லக்ஹோல்ல விழுந்த அந்த பையனா.. அவங்களுக்கு தெரியும்னு தான் எனக்கே தெரியுமே...

லியான் : ஏன் ஷரூரா.. வட்ரன நா ரீமாடிஃபை பன்னி அதுக்கு வட்ரன்னு பேரு வச்சுமா அந்த லியான் நான் தான்னு உங்ளுக்கு தெரியல...

ஷரூரா : என்ன நீங்க தான் லியானா... என வாயை பிளந்து நம்ப முடியாமல் கேட்க அவனோ

லியான் : ஆமாங்க நான் தான் லியான்... பின்ன வேற எதுக்காக பூமில இருக்கவங்களையும் பூமிக்கு இருக்குன்னே தெரியாத நிலால உள்ள நிரன் அஜியையும் உங்கள போய் பாக்க சொல்லப் போறேன் நான்..

ஷரூரா : சீரியசா தான் சொல்றீங்களா சாகித்யன்.. உண்மையாவே நீங்க தான் ... நீங்க தான் அந்த லியானா... ஆனா நீங்க எப்டி தப்பிச்சீங்க... ஹவ் ஈஸ் தட் ஈவன் பாஸிபில்... கருந்துளைலேந்து சுபோட்டாமிக்கல் பார்ட்டிக்கல்ஸ தவிர்த்து கண்ணிமைக்குர நேரத்துக்குள்ள மைல்கள தாண்டுர லைட்டால கூட வெளிய வர முடியாது... நீங்க இரத்தமும் சதையுமும் உள்ள மனுஷன்.. இதுக்கு வாய்ப்பே இல்ல... என அவன் கூறியதை சற்றும் நம்ப இயலாமல் பரபரக்க

லியான் : ஆமா ஷரூரா.. நா பிழைக்க வாய்ப்பே இல்லன்னு எனக்கு அப்போவே தெரியும்...

ஷரூரா : தயவு செஞ்சு கொஞ்சம் புரியிர மாரி சொல்ரீங்களா...ஏன் கொழப்புரீங்க

லியான் : அன்னைக்கு வட்ரன் கருந்துளைய நோக்கி பாய்ஞ்சப்போ எனக்கும் நா பிழைப்பேங்குர நம்பிக்கை இல்ல... ஆனா வட்ரன் மேல நம்பிக்கை வச்சு அந்த விஷப்பரிட்சைக்கு தயாரானேன்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now