மெடர்மான்
அந்த பச்சை பசேலென்ற வானத்தை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தான் யதீஷ்.. பின்ன கதை கதையாய் வேறு கிரகத்தை பற்றியெல்லாம் படித்திருப்பான்... கற்பனை செய்திருப்பான்... இவ்வாறு ஒரு வேற்று கிரகத்திலே வந்து தால் பதிப்பானென அவன் எதிர்பார்த்ததே இல்லையே...
ஷ்ரவன் அவனின் தன்னலமற்ற குணத்தை கண்டு இரசித்தபடியே அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான்... முபல்லன் தான் ஏதோ கண்டுபிடிக்க போவதாய் அவன் ஒரு புறம் சென்றிருக்க முதல் முறையாய் மெடர்மான் வந்தடைந்த யதீஷ் கையில் பிடிக்காத குறையாக அங்குமிங்கும் உளாத்தி கொண்டிருந்தான்...
முதலில் வீட்டிற்கு சென்றதும் அனைத்தையும் ஷ்ரவன் யதீஷிற்கு சுட்டி காட்ட எதற்சையாய் இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு பூமிக்கு வரும் முன்பாக கட்டிய ஒரு கயிற்றை நிரன் இரண்டு மாதமாய் களட்டாமல் வைத்திருப்பதை கண்டு அதை களட்டத் தொடங்கிய ஷ்ரவனுக்கு எந்த காவல் திட்டம் தோன்றியதோ யதீஷிடம் கூறாமலே அதை தனியே பத்திரப்படுத்தி கொண்டான்...
அங்கிருந்தே டெலிகேம் மூலமாக மெடர்மானின் ஆடிட்டோரியமாக மாறிய முந்தைய மார்ன் மற்றும் மெடரின் வீட்டிற்கு அழைத்து சென்றான் ஷ்ரவன்.. அந்த வீடு பூமியில் இருக்கும் அந்த மண்டபத்தோடு அனைத்திலும் ஒத்துபோவதை சொல்லி சொல்லி யதீஷ் வாய் வளிக்காது ஒவ்வொரு மூலையையும் சுட்டி காட்ட ஷ்ரவன் தலையிலடித்தபடி அவன் பின் சுற்றி கொண்டிருந்தான்...
ஒருவழியாக நண்பர்கள் இருவரும் முபல்லன் நினைவு வந்து அவனை தேடி சென்றனர்.. அவன் நட்டநடு மைதானம் ஒன்றில் ஏதோ ஒரு கருவியை வைத்தவாறு நோண்டி கொண்டிருந்தான்.. இவர்கள் திடுதிபுவென எங்கிருந்தோ குதித்ததும் அவன் திடுக்கிட்டு இவர்களை நோக்கினான்...
" என்னா பாஸ் பன்றீங்க...?? " என யதீஷ் சாதாரணமாகவே கேட்டாலும் முபல்லனிற்கு அவன் கொலைவெறியோடு கேட்பது போல் தோன்றியது... சத்யா அடித்த அடியோ ஷரூராவை இறக்கிய கருவியோ ஏதோ ஒன்று வெகுவாகவே அவனின் மூளையை பாதித்து வைத்திருந்தது...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...