தேடல் - 2

3K 50 103
                                    

அந்த இளங்காலை பொழுதினை தன் அழகிய கண்களால் இரசித்து கொண்டே குழம்பியை அருந்தினான் யதீஷ்.. மூன்று நிமிடம் வரை அதை இரசித்து ருசித்து அருந்தியவன் தன் செல்பேசியில் முகநூலில் சிறுது நேரம் விரலை மேலுக்கும் கீழுக்கும் இழுத்து தேய்த்து கொண்டிருந்தான்..

பிடித்த இடுகைகளுக்கு லைக்கும் தன் வசீகர புன்னகையையும் கொடுத்து வந்தவன் இடையில் கண்ட ஒரு இடுகையை கண்டு மிகவும் பிடித்து போய் உரிமையாளரின் முகப்பு கணக்கை சொடுக்கி பார்த்தான்...

கேத்ரியன் என்னும் இளம் பெண்ணின் முகப்பு பக்கம் அது.. ஆயினும் பெயரை தவிர்த்து சில இடுகைகளே அதில் எஞ்சி இருந்தது.. அதை பார்த்து கொண்டிருந்தவன் செவுரிலிருந்த கடிகாரத்தின் இரு முட்களும் ஒன்பதை நோக்கி படையெடுப்பதை கண்டு செல்பேசியை அணைத்து விட்டு உள்ளே சென்றான்...

யதீஷின் பழக்கமிது.. காலையிலே குழம்பிக்கும் அவனுக்குமான நேரத்தை எந்த ஒரு பொருளாலும் அல்லது உயிராலுமே தகர்க்க முடியாது.. அந்த விடியற்காலையை இரசித்தவாறு குலம்பியை ருசிப்பவன் முகநூலில் இருக்கும் தமிழ் கவிதைகளையும் இரசித்து வாசிப்பான்...

காலையிலே அவன் அன்னை மொழிக்கு அவன் தரும் ஒரு அன்பு கரம் தான் அது.. அடுத்த அரை மணி நேரத்தில் யதீஷ் நிறுவனத்தின் ஒரு அரங்கில் நின்றிருந்தான்... அவன் முன் பலரும் அமர்ந்து அவனது உரையை கவனித்து கொண்டிருந்தனர்...

ஒரு மணி நேரத்தில் அந்த மீட்டிங் முடிவடைய.. தான் நினைத்ததை போலவே தனக்கு சாதாகமாய் இந்த நிறுவனங்கள் வந்ததை எண்ணி புன்னகையுடன் கை குழுக்கி விட்டு விடை பெற்றான் யதீஷ்..

அந்த அரங்கை விட்டு வெளியேற போனவனின் காதுகளில் எதற்சையாய் விழுந்த சொற்களை மீண்டும் திருப்பி விட்டு கேட்ட யதீஷ் அவன் கேட்டதை அவனே நம்ப முடியாமல் மீண்டும் அதே அரங்கிற்குள் ஓடினான்...

அந்த அரங்கில் இவன் இருந்த வரை இருந்த சிலரும் அவ்வரங்கை விட்டு வேறு வழியில் வெளியேறியிருந்தனர்..

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin