தன் வெண்ணிற கதிர்ளை இருள் சூழ்ந்த உலகில் மென்மையாய் பரப்பி கொண்டிருந்தான் சந்திரன்... தென்றல் காற்றும் அவன் துணைக்கு அலையாடி கொண்டிருக்க... நட்ச்சத்திரங்கள் அனைத்தும் எரிக்கல்கள் விண்வெளியில் கேரம் போர்ட் விளையாடியதை போல் வாணெங்கிலும் " முடியலடா யப்பா " என புலம்பி மின்னுவதை போல் சிதறி கிடக்க.. அமைதியான இரவை இமை மூடி கதிரையில் சாய்ந்தமர்ந்தவாறு அனுபவித்து கொண்டிருந்தான் அவன்....
அவனை சுற்றிலும் பூக்கள் அழகாய் பூத்து குலுங்கியிருக்க... அந்த இரம்மியமான நேரத்தை இன்னும் அழகாக்க மழை தூரலாய் பொழிய... தன் மார்போடு அணைத்தவாறு வைத்திருந்த புத்தகத்தை எடுத்து கொண்டு உள்ளே சென்றான் அவன்...
மதி மர்மம் என்ற பெயர் அச்சிடப்பட்ட அந்த புத்தகத்தை மரடேபில் மீது வைத்தவாறு தன் சிகையை கலைத்து விட்டு கன்னாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து புன்னகைத்தான் யதீஷ் யமர்...
அக்கதையை நினைத்து புன்முறுவலுடன் அவன் அமர்ந்திருக்க....
தீரா : இப்டியே எவ்ளோ நேரம் செவுத்த வெறிக்க போறதா ஐடியா....
யதீஷ் : நீ இந்த கதைய எழுதுன ஆத்தர் யாருன்னு சொல்ற வர...
தீரா ம.வ : எழுதுனவ கிட்டையே கேக்குறான் பரு... மண்டபாத்திரம்...
யதீஷ் : சொல்லு தீருமா...
தீரா : அதான் அதுலையே " நான் யாரோ " ன்னு போற்றுக்காங்கல்ல டா... அப்ரம் ஏன் டா என் உசுர வாங்குர...
யதீஷ் : நீலாம் கேட்டா சொல்ல மாட்டா டி... உனக்கு கொரோனா வந்தா தான் சொல்லுவ...
தீரா : அட எடுப்பட்ட பயளே... நீ நல்லா இருப்பியா டா... நாசமா போறவனே... ஏன் டா...
யதீஷ் : அப்போ சொல்லு... யாரு எழுதுனது... அப்போதும் அசராமல் அதே பாய்ன்ட்டில் நின்றான்....
தீரா : எனக்கு தெரியாது டா...
யதீஷ் : இப்போ தெரியாது தெரியாதுன்னுட்டு திடீர்னு ட்விஸ்ட்டு வச்சேன்னு வை... போட்டு தள்ளீருவேன்..
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...