தேடல் - 54

192 11 47
                                    

தமிழகம்

எங்கிருந்தோ வந்து விழுந்த நிரனை எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ந்து தள்ளி நகர அவன் ஒரு வழியாக நெற்றியை தேய்த்தபடி எழுந்துசுற்றி பார்க்கவும் முன்பே அவன் மீது காண்டிலிருந்த ஷ்ரவன் நிரனின் மீது பாய்ந்திருந்தான்...

நிரன் : ஐயோ கொல கொல கொல...

அஜிம்சனா : அப்டியே கழுத்த நெறிச்சு கொல்லுண்ணா.. அவன மேல போய் நா பாத்துகுறேன் என இவள் தொடக்கத்திலே ஷ்ரவனை ஏற்றி விட நிரன் அவளை ஆச்சர்யமாகவெல்லாம் பார்க்கவில்லை... ஏதோ தன் மனைவியே தன்னை கொலை செய்ய ஆள் வைத்திருப்பாளென அறிந்ததை போல ஷ்ரவனை தள்ளி விட்டு எழுந்தவன் அங்கு நின்றிருந்த தேவா கண்டவுடன் " அன்கில் ப்லீஸ் என்ன காப்பாத்துங்க " என அவர் பின் ஓடிச் சென்று நின்று கொண்டான்...

ஷ்ரவன் : டேய் ஒழுங்கு மரியாதையா இப்போ நீயா வந்தா சரி நா வந்தேன்னா அவ்ளோ தான் டா

நிரன் : டேய் இப்போ ஏன் டா எல்லாரும் என்ன கொல்ல சதித் திட்டம் போடுறீங்க... நா என்ன டா செஞ்சேன்...

ராவனா : நீ எதத் தான் டா அண்ணா செய்யல... நீ திருட்டு முளி முளிக்கும் போதே நாங்க சுதாரிச்சிருக்கனும்...

ஃத்வருண் : உன் புத்திய பத்தி தெரிஞ்சும் உன்ன தனியா நா விட்டேன் பாத்தியா என்ன சொல்லனும் டா டேய்...

ஸ்வத்தி : இப்போ எங்க டா போய் சுத்தீட்டு வர... இப்போ கூட வாயத் தொறக்குரானா பாரேன்...

ஆர்வின் : படுபாவி ஒரு முறையாவது எங்க கிட்ட சொன்னியா பன்னாடை என ஒரு டீசென்சியே இல்லாது அவன் கழுவி ஊற்ற தலையும் புரியாது வாலும் புரியாது விழித்து விழித்து நோக்கிய நிரன் அடுத்து கேட்ட சத்யாவின் கத்தலில் அரண்டு விழித்தான்...

சத்யா : வெளக்கெண்ணை.. ஒரு முறையாவது இந்த இரெண்டு வர்ஷத்துல இந்த உண்மைய எங்க கிட்ட சொல்லனும்னு தோனுச்சா டா உனக்கு...

நிரன் : டேய் போதும் டா.. எதப் பத்தி டா பேசுறீங்க...

சத்யா : யாரி உன் பொண்ணுன்னு ஏன் டா சொல்லவே இல்ல என அவன் சட்டையை பிடிக்க மற்ற அனைவரும் இவன் இதை பற்றியா கேட்டு கொண்டிருந்தான் என்பதை போல் அவனுக்கொரு முளியை பரிசளித்தனர்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora