திடுதிபுவென வந்து நின்றவனை கண்டு அனைவரும் விழிக்க யதீஷோ சத்யாவை இதுவரை பார்த்திராததால் யாரிது புது அட்மிஷன் என்ற கேள்வியுடன் பார்த்து கொண்டிருந்தான்...
அரானா அவனை கண்ட அடுத்த நொடியிலிருந்து வாயடைத்து அமர்ந்திருந்தாள்... அவளின் கன்னத்தில் தரை புரண்டு ஓடிய கண்ணீர் நிலத்தை அடைந்தும் எவரும் சத்யாவின் மீதிருந்து பார்வையை எடுக்காதிருக்க யாரியின் அழுகுரல் வீரிட்டு அவ்வீடு முழுவதும் நிறைந்தது...
சட்டென தன்னிலை பெற்ற அஜிம்சனா சாதாரணமாக இந்த நேரத்திற்கு யாரி அழ மாட்டாள் என்பதால் வேகமாய் எழுந்துச் செல்ல சில நொடிகளில் அவளிள் தோளில் சாய்ந்து அழுது கொண்டே வந்தாள் யாரி
இவர்கள் அனைவரும் சத்யாவினால் ஒரு விதமான உணர்வினால் மௌனத்தை கடைப்பிடித்து அமர்ந்திருந்தாலும் யாரியின் இடைவிடாத அழுகை அனைவரையும் யாரியின் புறமாய் திருப்பியது
அஜிம்சனாவிடமிருந்து கொண்டு அனைவரையும் கண்டு சற்று நடுங்கிய யாரி நிரனை கண்டதும் அவனை நோக்கி கரங்களை மூடி மூடி நீட்டினாள்...
நிரன் மெதுவாய் எழுந்து அவர்கள் புறம் வரவும் அஜிம்சனாவிடமிருந்து நிரனிடம் செல்ல முயன்றவள் அப்போதே சத்யாவை கவனிக்க அது எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை... அடுத்த சில நொடிகளிலே யாரி சத்யாவை கண்டு தன் செப்பு இதழை விரித்து சிரித்தாள்...
" என்ன டி இவ்ளோ நேரம் அழுதுகுட்டு இருந்த எங்க அழுகைய காணும் "என்பதை போல் அஜிம்சனா அவளை பார்க்க யாரியின் கண்களில் தெரிந்த ஒரு மினுமினுப்பும் சந்தோஷமும் நிரனை ஆச்சர்யமடைய செய்தாலும் மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளின் எண்ணப்படியே சத்யாவிடம் சென்றான்...
யாரி தாவும் முன்பாகவே சத்யா அவளை வாங்கிக் கொள்ள அவனோடு ஒன்றிய யாரி மா..ம்மா என முனகியவாறு அவன் தோள் மீது தலை சாய்த்து கொண்டாள்...
சத்யா : ம்ம் அம்.. ஐ..ம் சா..ரி என தலை குனிந்து மெதுவாய் கூற அவனை முறைக்க முயன்று தோற்ற நிரன் வேகமாய் அவனை தாவி அணைத்து கொண்டான்...
ESTÁS LEYENDO
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Ciencia Ficciónஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...