மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க நெஞ்சிலிருந்து வெளியே குதிக்கத் துடிக்கும் படபடவென்ற இதயத்துடன் வேர்த்து விருவிருத்து போய் எழுந்த முபல்லன் மீண்டும் தொபக்கடீரென கீழே விழுந்தான்...
அவனின் அலரலினால் தலையை பிடுத்த படி தன் அலுவலக அறையில் இருந்த சைத்தான்யா முபல்லனின் அறையை நோக்கி ஓடி வர அதற்கு முன்பாகவே அந்த அறையிலிருந்த செவிலி ஒருவர் முபல்லனுக்கு தண்ணீர் புகட்டத் தொடங்கியிருந்தார்..
சைத்தான்யா : டாக்டர்... நர்ஸ்.. என்னாச்சு என கத்தி கொண்டே உள்ளே வந்தவனை முதலில் புரியாது பார்த்த முபல்லன் தன் பின் தலையை ஒரு முறை அழுந்த பிடித்து எழுந்தமர முயற்சித்து செய்தான்...
நர்ஸ் : நத்திங் டு வரி ஸர்.. நா டாக்டர உடனே வர சொல்றேன் என வேகமாய் வெளியே செல்ல சைத்தான்யா முபல்லனின் அருகே வந்து அவனை வாகாய் சாய்ந்தமர வைத்தான்...
சைத்தான்யா : ஹவ் டு யு ஃபீல்.. எப்டி இருக்க... என அருகே ஒரு கதிரையை இழுத்து அமர்ந்தான்...
முபல்லன் :.... ஃபைன்.. என எச்சிலை கூட்டி விழுங்கி மெதுவாய் கூறினான்..
சைத்தான்யா : டோன்ட் வரி யு ஆர் ஃபர்ஃபெக்ட்லி ஃபைன்.. சீக்கிரமே சரியாய்டும்
முபல்லன் : ம்ம்ம்... சை..த்தான்யா.. என்னாச்சு எனக்கு என மெதுவாய் கேட்க
சைத்தான்யா : வெல்... ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி
முபல்லன் : ஒரு வர்ஷமா என அதிர்ச்சியாய் கேட்க
சைத்தான்யா : கூல் கூல்.. ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு அக்சிடென்ட்... அதுனால கோமாக்கு போய்ட்ட... இப்போ
முபல்லன் : மை காட்... இன்னைக்கு டேட் என்ன சைத்தான்யா... நா இப்போ எங்க இருக்கேன்.. என பதட்டமாய் கத்தினான்...
சைத்தான்யா : ஹே கூல் முபல்லா... நீ என்னோட ஆபீஸ்ல தான் இருக்க... இன்னைக்கு டேட் வந்து 30த் என கூறி கொண்டிருக்கும் போதே மருத்துவர் அந்த அறைக்குள் நுழைந்தார்...
ESTÁS LEYENDO
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Ciencia Ficciónஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...