தேடல் - 10

441 25 120
                                    

நிரன் : இராட்சசி எழுந்திரி டி.. எழுந்திரி... என உறங்கிக் கொண்டிருந்த அஜிம்சனாவை போட்டு உலுக்கு உலுக்கென உலுக்க அவளோ

அஜிம்சனா : டேய் சும்மாண்டு போடா.. தூக்கம் தூக்கமா வருது... நா ஒரு வாரமா சரியாவே தூங்கல.. நா தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊங்கனுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉம் என ஒரு பெரிய ஊவை இழுத்து இறுதி ம்முடன் முடிக்க

நிரன் : உன் தலைல பார விழ போகுது டி

அஜிம்சனா : விழுந்தா விழுந்துட்டு போது போ என கூறியவளின் கரம் அவளின் வாய் மொழிக்கு மாறாக அவன் இடையை அணைத்து கொண்டது...

நிரன் : ஷ்ஷ் நா ப்ரின்ஸ் சொல்றேன் எழுந்துடு என பிடிக்காத தன் பதவியை உபயோகிக்க

அஜிம்சனா : போ டா நீயும் உன் மண்டையும் என நேற்று விழுந்து விழுந்து உபசரித்தவள் இன்று இவ்வாறு இருப்பதை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது...

நிரன் : ஏ நா ப்ரின்ஸு டி.. என்ன மதிக்கனும் டி நீனு...

அஜிம்சனா : இந்த ரூமுக்கு வெளிய தான் நீ இந்த கிரகத்துக்கு ப்ரின்ஸ்... இந்த ருமூலையும் இல்ல.. எனக்கும் இல்ல... என வெகு சாதாரணமாக கூறினாள்...

நிரன் : அடியே தாரா நம்மள பூமிக்கு வர சொல்லீர்க்கா டி.. நா போறேன் நீ தூங்கு என்கவும் அரக்க பறக்க எழுந்தாள் அஜிம்சனா

அஜிம்சனா : உண்மையாவா நாம பூமிக்கு போறோமா.. திரும்பவுமா.. தாரா கூப்ட்டாளா... எப்போ கூப்ட்டா.. எதுல கூப்ட்டா.. எப்போ போறோம்.. எப்டி போறோம்... யாரு யாரு போறோம்.. யாரு யாரு வராங்க.. ஹே நானும் வருவேன்.. என்ன விட்டு நீ எப்டி போவ என இறுதி கேள்விக்கு அவனின் சட்டையை கொத்தாய் பற்றி அவனை நோக்கினாள்...

நிரன் : மடம்க்கு இப்போ மட்டும் தூக்கம் எங்க போச்சாம்... என சாதாரணமாய் கேட்க அவள் சில முறை விழித்து கொண்டிருக்கும் போழுதே நிரன் அஜிம்சனாவை அவன் புறமாய் இழுக்க அவனை இன்னும் விழித்து விழித்து பார்த்தாள் அவள்...

நிரன் : நா இவ்ளோ சொல்லி நீ எந்திரிக்கல.. என் தங்கச்சி பேரு சொன்னதும் மடம் உடனே எந்திரிச்சிட்டீங்க...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora