தேடல் - 8

523 25 53
                                    

கேத்ரியன் மற்றும் சித்தாரா இருவரும் இரு வருடமாய் பூட்டி கிடக்கும் அந்த பெரிய வீட்டின் முன் நின்றிருந்தனர்.. அவர்களின் கண்களில் அப்போவா இப்போவா என தெரியாமல் வெளி வரத் துடித்த கண்ணீர் முத்தாய் மின்னிக் கொண்டிருக்க அவர்களின் மனம் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைவு பெற்று சமைந்திருந்தது...

சித்தாரா : ஹ்ம் நீயும் என் கூட வரியா என அவளை பார்க்காமலே கேட்க அதற்கு ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு தன்னை நிலை படுத்தி கொண்ட கேத்ரியன்

கேத்ரியன் : நீ போய்ட்டு வா... நா இங்கையே இருக்கேன் என இவளும் திரும்பி நின்று கொண்டாள்.. ஹ்ம் என்ற ஒரு தலையசைப்புடன் முன்னேறி நடந்த சித்தாரா வீட்டின் சாவியை பூட்டிற்குள் இட்டு அக்கதவை திறந்து உள்ளே சென்றாள்...

எதிர் பார்த்திருந்தது தான்.. ஒளிர்ந்த சாயத்தில் என்றும் இதமான உணர்வை தரும் அவ்வீடு இன்று ஒளியின் வழியின்றி இருண்டு கிடந்தது... மூலை முடுக்கெங்கிலும் அந்த வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத வரை தற்காலிகமாய் வீடு கட்டி குடியேறியிருந்த பல சிலந்தி குடும்பங்கள்.. வேண்டா வெறுப்பாக காற்றில் அசைந்து கொண்டிருந்த தீரை சேலைகளில் இருந்து தொடர்ந்து முழு சுவருகளிலும் ஒன்றியிருந்த ஒட்டடைகள் என திகில் படத்திற்கு வாடகை விடுமளவு இருந்த அந்த வீட்டை கண்டு ஒரு பெருமூச்சே சித்தராவிடமிருந்து வந்தது...

வழியில் தடைகளை போல் வந்த ஒட்டடைகளை ஒதுக்கி விட்டு படிகட்டின் வழியாக மேலே சென்ற சித்தாரா அவளது பழைய அறையை கண்டதும் அக்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல அவ்வறைக்கும் கீழிருக்கும் நிலைக்கும் துளியும் வேறுபாடில்லை...

போட்டது போட்ட படி அப்படியே இருந்தது... கலைந்து கிடந்த கட்டில் விரிப்பை அரித்திருந்த பூச்சிகள்.. ஒட்டடைகளாலும் தூசியினாலும் நிறைந்திருந்த சுவருகள்.. புகை மண்டலமென காற்றுபுக வழியின்றி அடைந்து கிடந்தது...

அறையை சுற்றி தன் கண்களை சுழல விட்ட சித்தாரா அந்த சுவருகில் ஒட்டப்பட்டிருந்த தாள்கள் அங்கங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஒரு சில பொம்மைகள் சில விஞ்ஞான பொருட்களென அனைத்தையும் ஏறிட்டவாறு இறுதியாய் அங்கிருந்த மேஜையை காண அவள் எதிர்பார்த்து வந்த பொருள் அங்கிருப்பதாக அவள் மனமும் வலியுறுத்தியது...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora