அந்த அழகிய காலை வேளையில் வீட்டின் வளாகத்தில் நுழைந்த காரிலிருந்து காக்கி உடையில் வேர்த்து விருவிருக்க உடலை முறுக்கிய சோர்வுடன் வெளியேறினான் ஷ்ரவன்...
அரை மணி நேரம் முன்பாக வந்த ஒரு அவசர அழைப்பினால் உறக்கத்திலிருந்து திடுதிபுவென எழுந்த ஷ்ரவன் காலை நான்கரை மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்த காண்டில் வீட்டை விட்டு கெளம்பிச் சென்றான்...
அவன் சென்ற இடம் இவர்கள் வீடு அமைந்திருக்கும் அருகிலே உள்ளதால் இவன் நினைத்ததை விடவும் விரைவாய் அவ்விடத்தை சென்றடைய தன் காரை விட்டு இறங்கியவனின் கண்கள் மூன்றாண்டுகள் பின் அதிர்ச்சியில் விரிந்தது...
மூன்றாண்டுகள் முன் அந்த பறந்து விரிந்த வானில் அவன் கண்ட அந்த எரிக்கல்லிற்கு பின் எதுவும் இவனை இந்தளவிற்கு அதிர்ச்சியடையச் செய்யவில்லை...
அந்த ஒரு ஏக்கர் வேற்று நிலத்தை சுற்றியிருந்த வேலியை பிடித்து கொண்டு நின்றிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்டோரின் கண்கள் அந்த நிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தையே துளைத்தெடுக்க பலரும் தங்களின் செல்பேசிகளால் பசக் பசக் என படம் பிடித்தவாறு ஏதேதோ முனுமுனுத்து கொண்டிருந்தனர்.... அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றி பல காவலர்கள் தடுப்பமைத்து அது மற்றவர்கள் பார்வையில் படாதவாறு வேகாவேகமாய் செயல் பட்டு கொண்டிருந்தனர்...
ஒரு பக்கத்தில் பத்திரிக்கை நிபுனர்கள் காவலர்களை தாண்ட முயற்சி செய்து கொண்டிருக்க கேமராமன்கள் அவர்களின் கமராக்களால் அந்த நிலத்தை வெவ்வேறு அங்கிலில் புகைபடமெடுத்து பிசியாக அவரவர் நிறுவனத்தின் தொகுப்பாளர்கள் பேசுவதை லைவ் டெலிகஸ்ட் செய்து கொண்டிருந்தனர்...
ஷ்ரவன் வேகமாய் அவர்களை தாண்டி நேர் வழியில் செல்ல அந்த தொகுப்பாளர்கள் வேகமாய் வந்து ஷ்ரவனை சுற்றி வளைத்தனர்...
" இந்த சம்பவத்த பத்தி என்ன நினைக்கிறீங்க சர் "
" இது நமக்கான ஆபத்தா.. இல்ல வேற எதாவதுமா "
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...