தேடல் - 27

216 18 27
                                    

தன் அலுவலக அறையில் ஒரு வழக்கின் கோப்பை பார்த்து கொண்டிருந்த ஷ்ரவன் குறுக்கும் நெடுக்கும் நடந்த படி குழப்பத்தில் நெற்றியை நீவ கண்களை மூடி ஒரு வருடத்திற்கும் முன்பாக பூமியில் விழுந்த பெயரறியா அந்த எரிக்கல்லே நினைவலைகளில் வந்துச் சென்றது...

அந்த கோப்பை மூடி வைத்த ஷ்ரவன் இரவு உணவுக்கான நேரமானதை கண்டு வெளியே செல்ல ஹாலில் யதீஷ் மற்றும் ப்ரஜின் விளையாடி கொண்டிருந்தனர்...

அவர்களோடு அமர்ந்திருந்த ஃத்வருண் ஷ்ரவனை நிமிர்ந்து பார்த்து புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க பெருமூச்சுடன் ஒன்றுமில்லை என தலையசைத்து விட்டு அவனருகில் சென்றமர்ந்தான்...

மறு பக்கத்தில் மீராவும் மீனாவும் அமர்ந்து நிரனோடு வீடியோ காள் பேசிக் கொண்டு அவனை நச்சரித்து கொண்டிருந்தனர்... பூச்சாண்டியை கட்டி சோரூட்டுவது போய் ஃபோனில் நிரனை காட்டி யாரிக்கு உணவூட்டி கலைத்து போய் வந்தமர்ந்தாள் அஜிம்சனா

இவர்களை மேலும் காக்க வைக்காமல் தன் தோள் வரை வளர்ந்திருந்த கேசத்தை வெட்டி விட்டு தனது பழைய ஹெர்ஸ்டைலிலே கரத்தில் வக்கீல் கோட்டுடன் சோர்வாய் உள்ளே வந்தான் சத்யா

சத்யா அனைவருக்கும் பொதுவாய் ஒரு புன்னகையை கொடுத்து விட்டு தன்னறைக்குச் செல்ல கால்மணி நேரத்தில் குளித்து விட்டு தலை துவட்டியவாறு கதவை திறந்தவன் தன் முன் நின்ற அரானாவை கண்டு புன்னகைத்தான்..

அவளோ அவன் புன்னகையை திருப்பி கொடுத்ததோடு அவனது காஃபீயை கொடுத்து விட்டு

அரானா : டின்னர் ஹாட்பாக்ஸ்ல இருக்கு ... தூங்குரதுக்குள்ள சாப்ற்று சத்யா.. குட் நைட் என அவனின் பதிலெதிர் பார்க்காமல் அவளறைக்குச் சென்றாள்...

அவளின் இந்த ஒதுக்கத்தை பழகிக் கொண்டதை போல தன்னைத் தானே நொந்து கொண்ட சத்யா தன்னறையிலே ஒட்டியிருக்கும் பால்கெனிக்கு சென்று நிலவை வெறித்தபடி நின்றான்...

முபல்லனின் வார்த்தைகளும் அவன் ஏன் ஒரு வருடமாய் தன் கண்ணில் சிக்கவில்லை என்றும் தெரியாமல் யோசித்து கொண்டிருந்தவனுக்கு அவனிருந்த நிலை தெரியவில்லை...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن