தேடல் - 32

187 16 30
                                    

ஷரூரா : அண்ணா...லி அண்ணா... லி அண்ணா.. டேய் அண்ணா என திரையையே வெறித்து கொண்டிருந்த லியானின் தோளை சுரண்டி கொண்டிருந்தவள் அவன் காதருகில் சென்று கண்களை இறுக்க மூடி கத்த திடுக்கிட்டு அதிர்ந்தெழுந்தான் லியான்...

லியான் : என்னாச்சு என்னாச்சு என்னாச்சு

ஷரூரா : ஒன்னும் ஆகல... ஏன் டா குதிக்கிர...

லியான் : ஏன் டி உனக்கிந்த கிருக்குத்தனம்... எரும என திட்டியபடியே அவன் கதிரையை இழுத்து மீண்டும் அமர்ந்தான்...

ஷரூரா : பின்ன என்ன நானும் உன்ன நாழஞ்சு முறை கூப்டு பாத்துட்டேன்... ஏதோ ஸ்விட்ச் ஆஃப் பன்ன ரோபோ மாரி அதையே பாத்துட்டு இருந்த அதான் ரோபோட்ட ஆன் பண்ணலாமேன்னு கத்துனேன்.. என தலையை தேய்த்தபடி அவனருகில் இருந்த ஒரு கதிரையில் அமர்ந்தாள்...

லியான் : உஃப் சரி கேளு ஒழுங்கா... ம்யோரான்னா அது நிலால உருவாகி ஒரு இரெண்டு வர்ஷம் மட்டுமே இருந்த ஒரு மொழியாம்... அதான் நமக்குத் தெரி- என கூறிக் கொண்டிருந்தவனின் மூளை தான் ஏதோ ஒன்றை கேட்டதாய் லியானுக்கு வலியுறுத்த மெதுவாய் தலையை திருப்பியவனுக்கு மீண்டும் ஒரு முறை அக்குரல் கேட்டது...

" ஆனா எனக்குத் தெரிஞ்ச வர நிலால அப்டி ஒரு மொழி உருவாகவே இல்லையே லியான் "

ஷரூராவும் சற்று அதிர்ந்து சுற்றி பார்க்க தன் கடிகாரத்தை நோக்கிய லியான் ஷரூரா கத்திய கத்தில் அதை தெரியாமல் உயிர்பித்திருப்பதை கண்டான்...

அதில் நிரனின் பெயர் அச்சிட்டுத் தெரிய என செய்வதென தெரியாமல் அதை உடனே அணைத்து தெரியாமல் உருவாக்கியிருந்த இணைப்பை அறுத்த லியான் தலையை தாங்கி அமர்ந்தான்...

அவனின் தலை மீண்டும் வலிக்கத் தொடங்கியிருக்க ஷரூராவின் அதிர்ச்சியுடன் கூடிய அரவத்தில் திரும்ப எத்தனித்தவனின் மீண்டும் உறைந்து அமர அவன் முன்னிருந்த திரையில் தெள்ளத் தெளிவாய் ஒரு நீல ஒளி மின்னி மறைவது பிரதிபளிக்க அவன் திரும்புவதற்குள்ளாகவே லியானை இறுக்கி அணைத்திருந்தான் நிரன்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now