நிலவு
நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியில் சிலையாய் குரோபடரான் ராஜாவை பார்க்க நிரனுக்கு வந்த கோவத்தில் எம்பிச் சென்று குரோபடரான் ராஜாவின் கழுத்தை பிடிக்க... நிரனை இன்று அதிக கோபத்தில் கண்டதாலோ என்னவோ வீரர்கள் எவரும் அவனை தடுக்க ஓரடியும் எடுத்து முன் வைக்கவில்லை...
நிரன் : அந்த பொண்ணு உங்களுக்கு என்ன பாவம் செஞ்சா... உங்க தன்னலத்த மட்டும் விடவே மாட்டீங்களா... உங்க புத்துக்கு உரைக்கிதா இல்லையா கிங்.. அந்த பொண்ணுக்கு என்ன பத்தி எதுவுமே தெரியாது... அவள ஏன் நீங்க புடிச்சீங்க..
குரோபடரான் : ப்ரின்ஸ்... நா செஞ்சதுல எந்த தப்பும் இல்ல... நீங்க என் பக்கத்துலேந்தும் யோசிங்க...
நிரன் : எனக்கும் எல்லா பக்கத்துலேந்தும் யோசிக்கனும்னு தெரியும்... ஆனா நீங்க இப்போ செஞ்சிருக்க காரியம் எந்த விதத்துல பாத்தாலும் தப்பு தான்... ஒரு அப்பாவி உயிர எடுக்க உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தா... அவள தண்டிக்க உங்களுக்கு யாரி உரிமை கொடுத்தது...
குரோபடரான் : உங்கள பத்தி கேட்டப்போ அந்த பொண்ணு சொல்லீருந்தா இவ்ளோவும் நடந்துருக்காது ப்ரின்ஸ்...
நிரன் : யோவ் உனக்கு புரியிதா இல்லையா.. நா எங்க இருக்கன்னு அவ சொல்லி உனக்கு தெரிஞ்சிட்டா நீ என்ன உன் வழிக்கு கொண்டு வர்ரதுக்காக சித்திரவதை பண்ணி கொன்னாலும் கொன்னுடுவன்னு தெரிஞ்சு எப்டி என்ன பத்தி சொல்லுவா என மீண்டும் மீண்டும் அவர் தன்னை நியாயப்படுத்துவதை போலவே பேசியதில் கோவத்தின் எல்லையை தாண்டி அவரை அழுந்த கீழே தள்ளினான்...
சில வீரர்கள் ஓடி வந்து குரோபடரான் ராஜாவை தூக்க அவர் நடந்ததை சற்றும் நம்ப இயலாமல் நிரனை விழி விரிய நோக்கிக் கொண்டிருந்தார்... உண்மை தான்... அவர் நிரனை உயிர் போகும் அளவிற்கு சித்திரவதை செய்திருக்கிறார்...ஒரு முறை அல்ல இரு முறை சித்திரவதை செய்து படுத்து படுக்கையாக்கினார்... அதில் நிரனை மட்டுமல்லாது அவனின் சரியாதியையும் அத்துனை வலியையும் வேண்டுமென்றே அனுபவிக்க வைத்தார்... அவனின் குடும்பத்தையே அழித்து விடுவேனென மிரட்டியிருக்கிறார்... இவ்வாறு இவர் செய்த பாவங்களில் ஒரு முறை கூட அவன் அவரை மரியாதை குறைவாய் ஒரு வார்த்தை பேசியதில்லை... ஆனால் தன் தவறே இல்லை என அவர் தீர்மானமாய் எண்ணும் ஒரு காரியத்திற்கு நிரன் அவரை நொடியில் தரமட்டமாக்கியது ஒரு உயிர் போகத் தான் காரணமாக இருந்து விட்டோம் என்பதை புத்திக்கு உரைத்துக் கூறியது...
KAMU SEDANG MEMBACA
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Fiksi Ilmiahஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...