தேடல் - 51

195 13 24
                                    

தமிழகம்

அந்த அழகிய ஆஷ்ரமத்தின் வாயிலில் சிறு குழந்தைகளுக்கு கதை கூறியபடி அமர்ந்திருந்த தேவா எதற்சையாய் விண்ணை கண்டதும் செயழற்று உறைந்து அதை நோக்கலானார்...

தேவா " குழந்தைங்களா போய் தூங்குங்க டா... அப்பா பின்னாடியே வரேன் " என அவசரமாய் கூறி கொண்டே அனைவரையும் உள்ளே அனுப்ப இரவு தன் கணவனுக்கு என்றும் போல் ஒரு டம்ளரில் பாலோடு வந்தார் அன்பரசி..

அன்பரசியை கண்டதும் அவரின் பரிதவிப்பு மேலும் அதிகரிக்க அவரின் முகமாறுதல்களை கவனித்த அன்பரசி வேகமாய் அவரிடம் விரைந்தார்...

அன்பரசி " என்னங்க என்னாச்சு உங்களுக்கு... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? " என அவரின் தோளை பற்றி இவர் பொருமையாய் கேட்க " அன்பு.. உனக்கு.. உனக்கு சுகன்யா சொன்ன கதை நியாபகமிருக்கா??" என தலையுமின்றி வாலுமின்றி இவர் கேட்க விசித்திரமான ஒரு பார்வையை பதிலுக்கு கொடுத்த அன்பரசி

" அவ ஒரு கதை சொன்னா நினைவிருக்கும்... நீங்க எத கேக்குறீங்க? " என அசாதாரணமாய் கேட்டபடி அவரருகில் அமர்ந்தவரின் பார்வையும் இப்போது எதற்சையாய் விண்ணை தழுவி வர தேவாவின் கேள்விக்கு தனிச்சையாகவே இப்போது பதில் கூறினார் அன்பரசி..

அன்பரசி " ஒரு நாள் இந்த உலகத்தோட வானம் முழுதும் ஊதா நிறத்துல மாரி ஒரு எரிக்கல் மழைய பொழியும்... அந்த நிகழ்வுக்கு அப்ரம் உலகத்தோட முதல் மழை பேயிரப்போ வானம் தெளிவாகும் " என்றவரை நோக்கி திரும்பிய தேவா " ஆனா இது இவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நாம எதிர்பார்க்கலையே.. "

நிலா

சிலை போல் தன்னோடு வந்த லியானை இழுத்து ஒரு அறைக்குள் தள்ளிய நிரன் அந்த கதவை அடைத்து விட்டு லியானை உலுக்கத் தொடங்கினான்..

நிரன் : லி... டேய் லி என்னப் பாருடா... டேய்

லியான் : டேய் என்னால தான் டா அவ செத்துட்டா... என்ன மட்டும் அவ காப்பாத்தலனா அவ பூமிக்கே வந்துருக்க மாட்டா டா... எனக்காக ஹெல்ப் பண்ண போய் அநியாயமா என்ன விட்டு போய்ட்டா டா என உடைந்து அவன் மடிந்தமர அவனை தன்னோடு சேர்த்தணைத்து கொண்ட நிரன்

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now