தேடல் - 53

176 12 44
                                    

அன்பரசி : நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போ தான் சுகன்யாவ முதல் முறையா பாத்தேன்... வெயில் சுட்டெரிக்கிர நேரத்துல ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்தீட்டு இருந்தா... என அவர் கூறுகையில் அவரையும் மீறிய ஒரு புன்னகை மலர்ந்தது...

தேவா : அப்போ ஆர்வத்துல இவங்க தோழிகளானாங்க... சுகன்யா ரொம்ப நல்ல பொண்ணு.. பாக்குரவங்க எல்லாருகிட்டையும் சிரிச்ச முகமா பேசுற புள்ள.. புத்திசாலி துருதுருன்னு எங்கையாவது சுத்தீட்டு எதாவது செஞ்சிட்டே இருப்பா... அவளால தான் நான் உங்க அம்மாக்கு ப்ரொப்போஸே பன்னேன்...

அன்பரசி : ஆமா... அவ தான் ஒரு நாள் இவரு மரத்துக்கு பின்னாடி நின்னு எங்கள பாத்துட்டு இருக்காருன்னு என் கிட்ட சொல்லி அவர மாட்டி விட்டுட்டா... எங்க குடும்பம் எங்கள ஒதுக்குனப்பவும் எங்களுக்கு துணையா நின்னு கல்யாணம் பண்ணி வச்சா... அவ எதாவது கதை எழுதுறேன் கதை சசொல்லுறேன்னு நச்சரிச்சிட்டே இருப்பா பசங்களா.. கதை கதையா சொல்லுவா... பூமி தவிர்த்து வேற மூணு கிரகம் இருக்குரதாகவும்.. அங்க நிறைய மனுஷங்க இருக்காங்கன்னு சொல்லுவா... பூமில எரிக்கல் மழை வரும்... பூமில ஒரு நாள் வானத்துல ஒரு பெரிய கோடு மாரி தேரியும்... ஒரு நாள் சூரியன சுத்தி ஒரு வட்டமிருக்கும்... அத வெறுங்கண்ணாலே பாக்களாம்... நீல நிலா.. சிகப்பு நிலான்னு வேற வேற கல்ர்ல கூட நிலா தெரிய ஆரம்பிக்கும்... ஒரு நாள் பூமியோட வானமே ஊதா நிறத்துல மாறுனா அது உலகத்தோட அழிவ குறிக்கும்னு அறிவியலையும் விண்வெளியையும் புவியியைலையும் வச்சே எக்கச்சக்கமான கதை சொல்லுவா.. எங்க நட்பு இரெண்டு வர்ஷம் வளந்த ஒரு நாள் சுகன்யா நா என் வீட்டுக்கு போகப் போறேன்னு என் முன்னாடி வந்து நின்னா... நா எங்க போகப் போறாங்குர தைரியத்துல போய்ட்டு வான்னு அனுப்பி வச்சேன்... ஆனா அவ ஒரு வர்ஷத்துக்கு வரவே இல்ல... எங்க போனா என்ன ஆனான்னே தெரியாம நா ஒவ்வொரு நாளும் தவிச்சேன்...

தேவா : அப்போ தான் நா எதிர்பார்க்காத ஒரு நாள் சுகன்யா நம்ம கம்ப்பெனிக்கு வந்தா... என்ன இன்னும் ஆச்சர்யப்படுத்துனது என்னன்னா அந்த பொண்ணு முழு கர்பிணியா இருந்தது தான்... அவளுக்கு கல்யாணமானதே எங்களுக்கு தெரியாதப்போ எனக்கு இன்னும் இரெண்டு புள்ளைங்க இருக்காங்க... நாங்க இப்போ ஆபத்துல இருக்கோம் நீங்க தான் அண்ணா என் புள்ளைய காப்பாத்தனும்னு அழுது புலம்புனா...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now