என்ன தான் குழப்பத்தில் இருந்தாலும் அவர்களின் கண்ணீரும் முகத்தில் படர்ந்திருந்த மகிழ்ச்சியும் யதீஷை பின் வாங்கியே நிற்க வைத்தது...
அவன் எண்ணியதை போல் பல சந்தேகங்கள் அவனுக்குள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது.. அவன் புத்தகத்தில் வாசித்ததை போல் அந்த ஒரு வீட்டின் அருகில் ஈ காக்காவை தவிர்த்து வேறு எவரும் வீடு கட்டியிருக்கவில்லை.. இந்த வீடு நகரத்தை விட்டும் தள்ளி எல்லையில் தான் அமைக்கப்பட்டிருந்தது...
அவர்கள் மகிழ்ச்சியில் திலைத்ததால் இவனை ஒருவரும் கவனிக்கவில்லை... ரியாவும் மறந்திருந்தாள்...
தாரா ரியா : வி மிஸ்ட் யு ஆல் என புன்னகையுடன் கூற மற்றவர்களும் தலையசைத்து அமோதித்தனர்...
மீனா : இந்த திடீர் முடிவு எதுக்கு டி என தாராவை பார்க்க தாரா திரும்பி தான் பார்த்து கொண்டிருந்த மடிக்கணினியை பார்க்க அனைவரும் அவளூடே அம்மடிக்கணினியை கண்டு நடந்தவை நினைவு பெற்று சற்று அதிர்ச்சியுடுன் அவளை நோக்கினர்...
தாரா : நாம இதுக்கு மேலையும் ஒளிஞ்சிருக்க வேண்டாம்னு நெனச்சேன் அண்ணா...
ராவனா : நிரன் அண்ணாவும் அஜியும் வரலையா டி
டிவின் : வருவாங்க டி ... கொஞ்சமாவது உன் ஆள கண்டுக்குட்டியா நீ
ராவனா : ஐய்யோ போ டா நீ வேற என அவனை கண்ணீரோடு அணைத்து கொள்ள மற்ற ஜோடிகளும் அவர்களை பார்த்து சிரித்தனர்...
ரியா : அப்ரம் ... இது என தன் கடிகாரத்திற்கு " கெட் தி ஒன் டு அவர் ஹோம் ஹு சேவ்ட் ரியா " என வந்திருந்த கோடிங்கை காட்டவும் அனைவரும் அவளை போலவே அவரவர் கடிகாரத்தை காட்ட அங்கிருந்த அனைவரின் கடிகாரத்திலும் அந்த கோடிங் மிளிர இப்போது அனைவரும் ஒரு சேர திரும்பி வாயிலில் நின்றிருந்த யதீஷை நோக்கினர்...
திடீரென தன்னை நோக்கி அனைவரும் திரும்பவும் யதீஷ் பேய் முளி முளிக்க தாரா ரியாவை தோளில் இடித்து ஹஸ்கி வாய்சில் " உன் ஆளு டி " என்க அதற்கு ரியா அவளுக்கு டெத் க்லரை பரிசாய் கொடுத்தாள்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...