டிவினுக்கு எழ உதவி செய்த ரியா அவனை மேலும் கீழும் பார்க்க அவன் வேகமாய் மூச்சை இழுத்து விட்டு கொண்டிருக்க ராவனா ஓடி வந்து அவனோடு ஒன்றியிருந்தாள்.... ராவனாவை அணைத்த படி சுற்றி எங்கிலும் நோக்கிய டிவின் தன் பதட்டம் நினைவு வந்தவனாக
டிவின் : டேய்... ஒரு... பெரிய... பிரச்சனை டா
மித்ரான் : அது எங்களுக்கே தெரியும் டா... நீ இந்த நேரத்துல எங்க போய் ஊரு சுத்தீட்டு வர என மடிக்கணினியை விட்டு கண்ணை எடுக்காமலே அவன் கேட்க டிவின் தெரியுமா என ஒரு நொடி முளாத்து விட்டு பின்னர் தெளிவடைந்தான்...
டிவின் : முளுசா கேளு டா... இப்போ நாம ப்லக் ஹோல நோக்கி இழுக்கப்பட்டுட்டு இருக்கோம் என வாலும் இன்றி தலையுமின்றி இவன் மொட்டையாய் கூற மற்றவர்கள் அதிர்ச்சியில் அவனை வாயை திறந்து நோக்கினர்...
சக்தி : என்னடா உளறுற... ஹையோ எப்டி டா நா உங்களுக்கு புரிய வைப்பேன் என இவன் மீண்டும் ஏதோ வாயெடுக்க தொடங்கும் முன் சரியாக கீழே எதோ உடைந்து நொருங்கும் சத்தத்தோடு யாரி மட்டும் ப்ரஜினின் அலரல் அனைவரின் காதையும் கிளிக்க அடுத்த நொடி டிவின் இறக்கை இன்றி கீழே பறந்திருந்தான்...
வீட்டின் நடுவில் சைத்தான்யா முபல்லனை பிடித்தபடி நின்றிருக்க அவர்கள் முன் வேதவள்ளி கேடையம் போல் நின்றிருக்கவும் அவருக்கு நேராக சத்யா கோவத்தில் வெறிப்பிடித்தவனை போல் ஒரு உடைந்த கன்னாடி பூத்தொட்டியோடு நின்றிருந்தான்...
அவன் தாராவின் அறையில் குழந்தைகளை சமாதானம் செய்து கொண்டிருந்த போது வீட்டின் மணி விடாது அடித்ததால் குழந்தைகளை ஒரு சோபாவில் அமர வைத்து விட்டு கதவை திறந்தவன் முபல்லனை கண்டதும் வேறு மாறியாக மாறிவிட்டிருந்தான்...
ஆனால் எப்போது அந்த கன்னாடி உடைந்த சத்தத்தில் குழந்தைகள் அலரினரோ அதை அப்படியே போட்டு விட்டு பதறி போய் இவன் குழந்தைகளிடம் ஓடி வர அந்நேரத்திற்கு டிவின் அங்கு வந்திருந்தான்..
STAI LEGGENDO
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Fantascienzaஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...