தேநீர் விடுதிக்கு சென்று சாவகாசமாக தன்னுடைய மாலை வேளை பாலை அருந்தி விட்டு, நண்பனிடமும் சற்று வம்பளந்து விட்டு இருபத்தைந்து நிமிடங்களில் மறுபடியும் மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்தவனை ஒரு குரல்,
"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்.....? நீங்க தான எங்க காருக்கு பின்னால வந்து, அந்த ஆக்ஸிடென்ட்ல அடிபட்ட க்ரே கலர் இன்னோவாவ ஓட்டிட்டு வந்தது? த தேர்டு ஒன்?" என்று கேட்டு நிறுத்தியது.
"அப்பாடா.... ஒருவழியா நம்மள கேட்டு ஆளுங்க வந்துட்டானுங்கடா.... நல்லவேள நம்ம மச்சானோட காசு தப்பிச்சுடும்!" என்று மனதிற்குள்ளாக நிம்மதி வயப்பட்டவன் அவனை அழைத்த குரலிடம் திரும்பினான்.
அவள் ஒரு அழகி! பொன்னிறம்! ஐந்தரை அடி இருப்பாள்! ஒல்லிக்கும் சற்றே பருத்த
நடுத்தரமான உடல்வாகு; கண்களில் கண்ணாடி அணிந்திருந்தாள். தலைமுடியை மழித்து ஒரு ஸ்கார்ஃபால் மூடியிருந்தாள். இடது நெற்றியில் இருந்து அவளது தலைப்பகுதி வரை பெரிய காயம்! இவளது நிலைமை நம்மை விட மோசம் போலும் என்று நினைத்தவன்,"அந்த க்ரே கலர் இன்னோவாவ ஓட்டிட்டு வந்தது நான் தான்ங்க!
நீங்க யாருங்க? உங்களுக்கு எப்டி என்னைய தெரியும்?" என்று கேட்டவனிடம்,"போலீஸ் உங்க வண்டி நம்பரையும் நோட் பண்ணியிருந்தாங்க ஸார்! அவங்க கிட்ட கேட்டு தான் உங்க வண்டியோட டிராவல்ஸ கண்டுபிடிச்சு உங்க கிட்ட வந்தேன். நிறைய வேல இருந்தது ஸார்; உடம்புக்கும் சுத்தமா முடியல. அதான் ஒருவாரமாகிடுச்சு! ஸாரி ஸார்!" என்றாள் அவள்.
"யம்மா புண்ணியவதி..... உன் லாரிய வச்சு நா என்ன செய்ய முடியும்? உன்னையால தான் நான் இன்னிக்கு கன்னத்துல மார்க்கு வாங்கிட்டு ஒக்காந்துருக்கேன். எங்கம்மா கால உடைச்சிக்கிட்டு உள்ள கெடக்குது! நீ எதுக்கும்மா இங்க வந்த? எங்களுக்கு ஏதாவது செய்வோம்னு வந்தியா? நல்லாயிருப்ப. ஒரு ஐயாயிரத்த குடு! எம் ப்ரெண்ட் காருல ஒரு சைடுல சொட்ட விழுந்துடுச்சு! நீ விசாரிச்ச ட்ராவல்ஸ் என் ப்ரெண்டோடது தான்மா! ஏன் என்னைய விசாரிச்சப்ப அவன் உங்கிட்ட என்னையப் பத்தி சொல்லலையா?"
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...