"என்ன..... என்ன அமுதாம்மா? எப்டி ஒரு நெலமையில வதனிப்புள்ளய இங்க கூட்டிக்கிட்டு வந்த.... அது நம்மள எப்டி கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிடுச்சு இதெல்லாம் மறந்து போயிருச்சு ஒனக்கு? அவ என்ன உம்பொண்டாட்டியாவா ஆகிட்டா? இத ஏன் செய்யல, அத ஏன் செய்யலன்னு எப்டி உரிமை கொண்டாடுவ அவ கிட்ட?"
"அந்தப்புள்ள மனசுக்குள்ள எதையாச்சு நெனச்சு மறுகிட்டே கெடக்குன்னு சொல்லிட்டு தான நெதம் அவ கிட்ட செத்தப் போயி பேசிட்டு வந்த..... அந்த நல்லதனமெல்லாம் இன்னிக்கு காலையில எங்க மேயப் போச்சு? வதனிப்புள்ள உம்பொண்டாட்டியாவே இருந்துருந்தாலும், இன்னிக்கு நீ செஞ்ச காரியம் தப்பு......"
"அதென்ன கேக்குறதுக்கு யாருமில்லன்னு அத்துமீறுற புத்தி? வெட்டிருவேன் பாத்துக்க...... வதனிக்கு ஒரு பிரச்சனையும் வராம பாத்துக்க நான் இருக்கேன்! நீ மேல போயி அவ கிட்ட பேசி, அவள சமாதானம் பண்ணிக் கிழிச்சதெல்லாம் போதும்...... இனிமே தேவையில்லாம அந்த மாடிப்படியில கால வச்சுப் பாரு; பேசிக்குறேன்!" என்று சொன்ன முகிலமுதம் மகனிடத்தில் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விட்டு பெரிது பெரிதாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்.
"தப்புதான் அமுதாம்மா.... ஏதோ புத்தி கெட்டுப் போயி வர்த்தினிட்ட அப்டி மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன். இனிமே அப்டிப்பட்ட தப்ப நெனச்சுக் கூட பாக்க மாட்டேன்! அதுக்காக அவள ஒரேடியா பாக்கவே வேணாம்னு எல்லாம் சொல்லாத அமுதாம்மா...... அது எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்!" என்று சொன்னவனிடம்,
"இந்த அறிவு முன்னாலயே இருந்துருக்கணும் ஒனக்கு! அது அம்மாவோ, கூடப் பொறந்தவுகளோ, கட்டிக்கிட்டவளோ,
பெத்துக்கிட்டதுகளோ, கூட வேல பாக்குறவங்களோ, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களோ யாரா இருந்தாலும் சரி தான்....... பொம்பளைங்கள மதிக்க தெரிஞ்ச ஒரு மனுஷந்தான் ஜெயனு உண்மையிலயே ஒரு நல்ல ஆம்பளயா இருப்பான்.....""இன்னிக்கு அவள விட ஒஒடம்புல அதிகமா பலம் இருக்குங்கறதால நீ அவள கட்டாயப்படுத்துற..... நாளைக்கு ஒங்கொழந்தய அவ வயித்துல வச்சுருக்கும் போது அந்த மூணு கிலோ உயிர விட அவளுக்குத் தான் பலம் அதிகம்; உள்ள இருக்குறத கஷ்டப்படுத்தணும்னுட்டு அவளே அவ வயித்துல பலத்த காட்டி குத்திக்கிட்டான்னா.......?" என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருந்த தன்னுடைய தாயின் வாயை அவசரமாக மூடியவன்,
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...