🌻 அழகி 26

276 12 1
                                    

"யாருமேயில்லல்ல.... அப்புறம் எதுக்கு சும்மா கேள்வி கேக்குற?  இப்டி தனியா எங்கூட பயமில்லாம வந்து மாட்டிக்கிட்ட நீ! நான் உன்னைய இங்க கடத்திட்டு வந்துருக்கேன் தெரியுதா.....?
உஹாஹாஹா!" என்று சிரித்தவன் கஷ்டப்பட்டு சிரித்ததால் இறுமல் வேறு எடுத்து செறுமிக் கொண்டான்.

"ஓகே ஜெயன்..... எனக்கு ஒண்ணும் பிரச்சனையுமில்ல! இங்க இருக்குற வரைக்கும் நான் எனக்கு மெடிக்கல் லீவ் சொல்லிக்குறேன்; பட் உனக்கு நாய்னா கொஞ்சம் பயம் தான? இந்த மாதிரி எடத்துல வெறும் நாயில்ல; ஓநாய், கழுதைப்புலின்னு நாய் பேமிலி  எல்லாம் மொத்தமா வரும் தெரியுமா?" என்று வாயில் அடக்கிய சிரிப்புடன் கேட்டவளை தீக்கதிர் போல் முறைத்தவன் அடுத்த நிமிடமே அந்த கோபத்தை விட்டு விட்டு அவளிடம்,

"இங்க பாருங்க மேடம்; நீங்க என்னையப் பாத்து பயப்படலன்னா கூடப் பரவாயில்ல; என் வீக்னெஸ வெளிய சொல்லி என்னைய இப்டி மொக்க பண்ணாம இருங்க; உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!" என்று பரிதாபமாக  கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"அப்போ மரியாதயா சொல்லு..., இங்க யாரு இருக்காங்க?" என்று கேள்வியை மூன்றாவது தடவையாக கேட்டவளிடம் ஒரு அவசரமான மூச்சுடன்,

"ரொம்ப தேவையிருக்குங்குற மாதிரி யாராவதுன்னு நீ எங்கிட்ட கேட்ட பாத்தியா.....? அந்த மாதிரியான ஒரு பெருசு தான் இந்த வீட்ல இருக்குற பெருசு! மலையில தேனு எடுக்குறவர் வர்த்தினி! வயது எழுபதுக்கு மேல இருக்குன்னு வையேன்.... ஆனா பாக்குறதுக்கு ஐம்பது வயசு ஆளு மாதிரித்தான் தெரிவாப்ல; தேன எடுக்கப் போனார்னா இவரோட வேகத்துக்கும் லாவகத்துக்கும் ஈடா எளவட்டங்க கூட வேல செய்ய மாட்டானுக....!"

"நீ டார்ஸான் பாத்துருக்கியா? அந்த கொரங்குப்பய மவன் எப்டி காட்டுல அனாயாசமா தவ்விக்கிட்டு திரிவானோ, அத மாதிரித் தான் இந்த பெருசு மலையில தவ்வி தேன எடுத்துக்கிட்டு திரியும்!
இவரப் பாக்க தான் ஒன்னைய இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்தேன்!"

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Opowieści tętniące życiem. Odkryj je teraz