"யம்மா! மறந்துட்டேன் பாரேன்! கையில கருப்புக்கயிறு இல்லாம நான் சவாரிக்கு கெளம்புனதே இல்ல! இத்தன வருசமா கருப்புக்கயிறு எனக்கு ஒரு சென்டிமெண்ட்டான சாமான்! ரொம்ப பழசாகிட்டதால இன்னிக்கு காலையில அத அவுத்தேன்.... ஆனா புதுசு கட்ட மறந்துட்டேன்! நஸாருப்பய ஷெட் வேற பக்கத்துல வந்துருச்சு! அதுனால இந்த வாட்டி மட்டும் எனக்கு நீ கயிறு கட்டி உடுறியா?" என்று கேட்டவனை சாலையில் நடந்து கொண்டே முறைத்தவள்,
"நீ என்ன இன்னிக்கு பேட்டா வாங்கிட்டா உன்னோட
ட்ரைவர் வேலைய பாக்கப்போற? இல்லல்ல.... என்னைய எங்கயோ கூட்டிட்டு சுத்தணும்னு ப்ளான் போட்டுருக்க! அதுக்கு நஸார் ஸார்ட்ட வண்டி வாங்கிட்டு வரப்போற.... அவ்ளோதான? அதுக்கு எதுக்கு ஒனக்கு நான் கயிறு கட்டி விடணும்? என்னாலலாம் முடியாது!""பக்கத்துல தான நஸார் ஸார் கடை இருக்கு? நான் அவரோட கடையில வெயிட் பண்றேன்! நீ மறுபடியும் உன் வீட்டுக்குப் போயிட்டு உங்க அம்மா கையால அந்த கயிற கட்டி உடச் சொல்லிட்டு அவர் கடைக்கு வா!" என்று கொஞ்சங்கூட தயவுதாட்சண்யம் இல்லாமல் சொல்லி விட்டு அவனுக்கு முன்னால் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தாள் வதனி.
"கையவாச்சு புடிக்க வப்போமுனு பாத்தா சீ பேன்னு சொறிநாய வெரட்டி உடுற மாதிரி வெரட்டுறாளே இவ.....? எப்டியோப்பா இன்னிக்கு பூரா இப்டியே ஏதாச்சு வாய் பேசி பேசி இவ மொகத்த தூக்கி வைக்க உடாம பாத்துக்கணும்!" என்று நினைத்த படி தன்னுடைய வேக நடையால் அவளை எட்டிப் பிடித்து அவள் பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான் ஜெயன்.
"எதுக்கு எம்பக்கத்துல இடிச்சுக்கிட்டே வர்ற? தள்ளி நட!" என்று சொன்னவளிடம்,
"இதுக்கும் தள்ளி நடக்குறதுன்னா நான் டால்ஃபின் நோஸ்ல தான் போய் நடக்கணும்மா!" என்றான் கடுப்புக்குரலில்.
"டால்ஃபின் நோஸ்னா என்னது?" என்று கேட்டவளிடம் பரிதாபமாக உச்சுக்கொட்டியவன்,
VOUS LISEZ
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Roman d'amourஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...